மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் மும்பை எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2013-ம் ஆண்டு, தண்டனை முடிவதற்கு 8 மாதங்கள் முன்னதாகவே சஞ்சய் தத் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையில் ராஜீவ் காந்தி வழக்கு தொடர்பாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சுமார் 28 வருடங்களாகச் சிறையிலிருந்து வருகின்றனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் பலர் முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
Also Read: `அங்க ஆரம்பிச்ச அநீதி இன்னும் முடியல,விடியல!’-30 ஆண்டுக்கால காத்திருப்பால் கலங்கும் அற்புதம்மாள்
இந்நிலையில், எந்த விதிமுறையைப் பயன்படுத்தி சஞ்சய் தத், சிறைக்காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்பட்டார் என்பதை அறியத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரியிருந்தார் பேரறிவாளன். ஆனால், சஞ்சய் தத் விவகாரத்தில் எந்த விஷயத்தையும் தெரிவிக்க முடியாது என மகாராஷ்டிரா சிறைத்துறை, மாநில தகவல் ஆணையத்திடம் கூறிவிட்டது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் , தனிநபர் சார்ந்த விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் உள்ளதாகவும் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக எரவாடா சிறையில் தகவல் அதிகாரி, உரிய காலத்தில் தகவல் வழங்காததை எதிர்த்து புனே மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் பேரறிவாளன். அங்கும் உரிய தீர்வு கிடைக்காததால், எரவாடா சிறை தகவல் அதிகாரி மற்றும் அம்மாநில தகவல் ஆணையத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், தான் கேட்ட தகவல்களைப் பெற்றுத்தரக் கோரியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் பேரறிவாளன்.
Also Read: சிறையில் பேரறிவாளனுக்கு 27-வது ஆண்டு நிறைவு... ஒரு 'சின்ன விசாரணை'யின் கதை!
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/perarivalan-files-petition-in-mumbai-high-court
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக