இந்தியாவில் 16 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,83,792 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,20,582 ஆகவும் உயர்ந்துள்ளது.
நேற்று வரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,81,90,382 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதில் நேற்று மட்டும் 4,46,642 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/3072020-corona-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக