Ad

செவ்வாய், 28 ஜூலை, 2020

கொரோனா: `முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை!’ - ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு #NowAtVikatan

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை!

வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாளை 30-ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவிடமும் கருத்துகளைக் கேட்க உள்ளார். அப்போது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

மேலும், கொரோனா தடுப்பு பணியைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவக்குழு பரிந்துரை வழங்கும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் மண்டல வாரியாகப் பொது போக்குவரத்து தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசிதழில் வெளியீடு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த இல்லம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளதாக அறிவித்த தமிழக அரசு, அதனை அரசுடைமையாக்கியது. இந்நிலையில் வேதா இல்லம் அரசுடைமையாக்கியது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கனவே நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேதா இல்லம்

இந்நிலையில் வேதா நிலைய இல்லத்தில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 38 ஏசி, 556 பர்னிச்சர், 11 டிவி, 10 பிரிட்ஜ் உள்ளிட்ட 32,721 பொருள்களின் விபரமும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/29-07-20202-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக