Ad

திங்கள், 27 ஜூலை, 2020

கரூர்: காந்தி வேடம்; கையில் பதாகை! - கொரோனா விழிப்புணர்வில் அசத்தும் மாணவர்

கரூரில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் காந்தி வேடமணிந்து, தனது பாட்டியோடு கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையைக் கையில் பிடித்தபடி நடைபயணம் மேற்கொள்வது, கரூர் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

காந்தி வேடத்தில் விழிப்புணர்வு

கரூரைச் சேர்ந்தவர் கார்த்திக். கரூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சமூகத்தை சீர்கெடுக்கும் பிரச்னைகளுக்கு எதிராக இவர் அவ்வபோது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இன்று உலகில் எங்கும் நீக்கமற நிறைந்து, சூழலைக் கெடுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு செய்துவருகிறார்.

Also Read: கரூர்: `பழ மரத்தால் கொரோனா பரவுது!' - கோழிக் கடைக்காரரை எச்சரித்த ஆணையர்

கொரோனாவை ஒழிக்க வீட்டில் இருப்பதும், முகக்கவசம் உள்ளிட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு வெளியில் செல்வதும் மட்டுமே இப்போதைக்கு மக்களைப் பாதுகாக்கும் ஒரே வழி என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

விழிப்புணர்வு செய்யும் கார்த்திக்

ஆனால், மக்கள் பல இடங்களில் பயமில்லாமல் உலாவருகிறார்கள். அப்படி கரூர் மாவட்டத்தில் உலாவரும் மக்களிடம்தான் கார்த்திக், மகாத்மா காந்தியின் வேடமணிந்து, விநோதமான முறையில் விழிப்புணர்வு செய்துவருகிறார்.

கார்த்திக்கிடம் பேசினோம்.

"வேகமாகப் பரவிவரும் கொரோனா, முன்பு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை மட்டுமே தாக்கும்னு சொன்னாங்க. ஆனால், இப்போ யாரை வேண்டுமானாலும் அது தாக்கும் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. 10 வயது சிறுவர்கள் இறக்கிறார்கள். திடகாத்திரமாக இருக்கும் மனிதர்கள் கொரோனா பாதித்து இறக்க நேரிடுகிறது. கொரோனாவின் பரவும் தன்மை ஒரு ஸ்டேபிளாக இல்லாததுதான் இந்த வைரஸ் இவ்வளவு உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம்.

விழிப்புணர்வு செய்யும் கார்த்திக்

அதனால், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட இருக்கும் ஒரே மருந்து, வரும் முன் காப்போம் என்பதுதான். அதாவது, அவரவர் வீடுகளில் பத்திரமாக இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களினால், வெளியே போக வேண்டும் என்ற சூழல் வந்தால், மாஸ்க் அணிந்து, கையில் சானிடைஸரை வைத்துக் கொண்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துச் செல்ல வேண்டும்.

Also Read: Corona Live Updates: ஓரே நாளில் 47,704 பேருக்கு கொரோனா!’ இந்தியாவில் 15 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு

இதைத் திரும்ப திரும்ப வலியுறுத்தியும், மக்கள் பலர் பயமே இல்லாமல் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வெளியில் உலாவருகிறார்கள். அதில் பலர் மெத்தப் படித்தவர்கள். அதைப் பார்த்ததும், எனக்கு கவலையை ஏற்படுத்தியது. அதனால், வித்தியாசமான முறையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தனும்னு நினைச்சேன். அதனால், வெள்ளையர்களை அகிம்சையால் விரட்டி அடித்த காந்தி வேடமணிந்து, கொரோனாவை விரட்டி அடிப்போம்னு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தேன்.

விழிப்புணர்வு செய்யும் கார்த்திக்

'விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு' என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் பிடித்துக்கொண்டு, கரூர் நகரின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். எனக்கு துணையாக, என் பாட்டியும் உடன்வருகிறார். எனது வித்தியாசமான கோலத்தைப் பார்த்து நின்று கவனிக்கும் மக்கள், 'இனிமேல் மாஸ்க் போடுறோம், சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கிறோம்'னு சொல்றாங்க. அதனால், எனக்கு திருப்தி ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இந்தமாதிரி விழிப்புணர்வை செய்வேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.



source https://www.vikatan.com/news/tamilnadu/people-appreciate-karur-school-students-corona-awareness-work

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக