Ad

செவ்வாய், 28 ஜூலை, 2020

5 நாள்களில் 1,200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! - அதிர்ச்சியில் கோவை

கொரோனா வைரஸ் பாதிப்பு தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. முக்கியமாக, கடந்த சில வாரங்களாக சென்னை தவிர, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி வரிசையில் கோவையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோவை

Also Read: கோவை: `பெட் இல்லை!' - கொரோனா பாசிட்டிவ் பெண் ஒரு நாள் முழுவதும் அலைக்கழிப்பு

கடந்த மாதம் வரை பாதிப்பு மிகவும் குறைவாக இருந்த கோவையில், தற்போது தினசரி 200 முதல் 300 பேருக்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இதுவரை இல்லாத வகையில் கோவையில் நேற்று ஒரே நாளில் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. உக்கடம், செல்வபுரம் பகுதிகளில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல, கோவை மாவட்டம் முழுவதுமே பாதிப்பு பரவலாகி வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் கோவையில் 1,228 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை

ஆட்சியர், பயிற்சி மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். சனிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை கோவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை

களத்தில் பணியாற்றும் அதிகாரிகளும், பொது மக்களும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பணிகளில் ஈடுபட வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-over-1200-persons-tested-corona-positive-last-5-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக