நான் தைராய்டு பிரச்னைக்காக மாத்திரை எடுத்து வருகிறேன். மேலும் எனக்கு சைனஸ் தொந்தரவும் உள்ளது. நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
- செந்தில்குமார் கருப்புசாமி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.
``கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு (ஏற்கெனவே தைராய்டு பாதிப்பு இல்லாதவர்களுக்கும்) தைராய்டு சுரப்பியும் பாதிக்கப்படுகிறது. அங்கும் இந்த வைரஸால் Subacute thyroiditis எனப்படும் அழற்சி ஏற்படுகிறது. இதனால் தைராய்டு வீங்கி, வலியும் வேதனையும் ஏற்படுவதுடன் சுரக்கும் ஹார்மோன் அளவிலும் (தைராய்டு ஹார்மோன்களான T3 மற்றும் T4) மாறுதல்கள் ஏற்படுகின்றன.
Also Read: Covid Questions: மஞ்சள் காமாலை இருப்பவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
இதனால் அவர்களுக்கு தைராய்டு சுரப்பு குறையவோ, அதிகரிக்கவோ வாய்ப்பு உண்டாகும். எனவே, ஏற்கெனவே தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அது கண்டிப்பாகத் தைராய்டு சுரப்பியை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, தைராய்டு சுரப்பிக் கோளாறு உள்ளவர்களுக்கு அதிலும் குறிப்பாக `ஆட்டோ இம்யூன் தைராய்டு' பாதிப்பு உள்ளவர்களுக்கு உடலில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதமானது, தைராய்டு சுரப்பிக்கு எதிராக உருவானது மட்டுமே. எனவே, இவர்கள் தடுப்பூசி போடத் தடையில்லை. தடுப்பூசி போடுவதால் இவர்களுக்கு ஏற்படும் எதிர்ப்பாற்றல் தைராய்டு சுரப்பியைப் பாதிக்காது. தடுப்பூசி மட்டுமே உங்களை கோவிட் தொற்றின் ஆபத்திலிருந்து காக்கும்.
Also Read: Covid Questions: புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
சைனஸ் என்பது நாசி ஒவ்வாமையால் ஏற்படுவது. அதற்கும் தடுப்பூசியால் ஏற்படும் ஒவ்வாமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, தைரியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-a-person-who-has-sinus-and-thyroid-complications-take-covid-19-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக