நான் வாரத்துக்கு ஒருமுறை இம்யூனோ சப்ரசென்ட் மாத்திரை (folitrax 5 mg) எடுத்து வருகிறேன். கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்டேன். அதற்காக இரண்டு மாதங்கள் மாத்திரைகளை எடுப்பதை நிறுத்தியிருந்தேன். எனக்கு தடுப்பூசி வேலை செய்திருக்குமா?
- உமா கிருஷ்ணன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இம்யூனோ சப்ரசென்ட் மருந்துகளை நீண்ட காலமாக எடுத்துக்கொள்வோருக்கு, தடுப்பூசிகளால் உற்பத்தியாகும் ஆன்டிபாடிக்களின் அளவு, சராசரியைவிட குறைவாக இருக்கும் என்பது பல தடுப்பூசிகளின் மூலம் அறியப்பட்ட தகவல்.
நீங்கள் கோவிட் தொற்றுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டுவிட்டதால், நோயைத் தடுப்பதற்குத் தேவையான எதிர்ப்பாற்றலை நிச்சயம் பெற்றிருப்பீர்கள். நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் இம்யூனோ சப்ரசென்ட் மாத்திரை, இணைநோய்க்கானது. அதை இரண்டு மாதங்கள் நிறுத்திவைத்திருப்பதெல்லாம் தேவையில்லாதது.
Also Read: Covid Questions: 2-ம் டோஸ் காலக்கெடு தாண்டிவிட்டது; மீண்டும் முதல் டோஸிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா?
அதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பிட்டிருப்பது ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸுக்கான மாத்திரை என நினைக்கிறேன். வெகு காலமாக அதை எடுத்து வரும் பட்சத்தில் இடையில் இரண்டு மாதங்கள் அதை நிறுத்தியதால் உங்கள் எதிர்ப்பு சக்தியில் பெரிய மாற்றங்கள் வந்திருக்காது. பயப்பட வேண்டாம். கோவாக்சினும் உங்களுக்கு நிச்சயம் பாதுகாப்பளிக்கும்.
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/i-have-stopped-immunosuppressant-to-take-covid-vaccine-is-it-affect-its-efficiency
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக