பிரதமர் நரேந்திர மோடிக்காக மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள அவ்ந்த் என்ற இடத்தில் கோயில் கட்டப்பட்டு இருந்தது. இக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவுக்கு சிலை வைக்கப்பட்டு இருந்தது. பாஜக பிரமுகர் மயூர் முண்டே ராஜஸ்தானில் இருந்து மார்பிள் கற்களை கொண்டு வந்து இந்த கோயிலை கட்டி இருந்தார். இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு சில நாட்கள் மட்டுமே ஆகிறது. இதனை காண தினமும் ஏராளானோர் வந்து சென்றனர். மறுபுறம், இந்த கோயில் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது. இந்த நிலையில் திடீரென கோயிலில் இருந்த மார்பளவு சிலையை காணவில்லை. அங்கிருந்து சிலை அகற்றப்பட்டுள்ளது. கோயிலை கட்டியவர் அகற்றினாரா அல்லது வேறு யாரும் அகற்றினார்களா என்று தெரியவில்லை. இது குறித்து கோயிலை கட்டிய மயூர் முண்டேயிடம் கேட்டதற்கு, என்ன நடந்தது என்று தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சிலை காணாமல் போனது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கிண்டல் செய்துள்ளனர். கோயில் வளாகத்திற்கு வந்த சில தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இது குறித்து கூறுகையில், ``புனேயில் நரேந்திர மோடி கோயில் கட்டி முடிக்கப்பட்டவுடன் எரிபொருள் விலை குறைந்துவிடும், பணவீக்கம் குறைந்துவிடும், வங்கி கணக்கிற்கு ரூ.15 லட்சம் வந்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் நாங்கள் இங்கு வந்து பார்த்தால் கடவுளையே காணவில்லை” என்று தெரிவித்தனர்.
Also Read: பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாததற்கு மோடி அரசு சொன்ன காரணம்! |The Imperfect Show
ஆனால், `அயோத்தியில் ராமர் கோயில் கட்டி வரும் நரேந்திர மோடியை கவுரவிக்கும் விதமாக இக்கோயிலை கட்டியதாக’ மயூர் தெரிவித்தார். ``மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். 370வது சட்டப்பிரிவை நீங்கியதோடு மட்டுமல்லாது முத்தலாக் முறையை ஒழித்துள்ளார். அதோடு ராமர் கோயிலும் கட்டுவதாக” மயூர் தெரிவித்தார். இக்கோயிலை ரூ.1.6 லட்சத்தில் கட்டி முடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/politics/the-bust-was-removed-within-a-day-or-two-of-the-temple-being-built-for-prime-minister-modi-in-pune
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக