உலக அளவில் வெற்றிகரமாகச் செயல்பட்ட தலைவர்களிடம் உள்ள 60 நல்ல குணாதிசயங்களில், 8 குணாதிசயங்கள் பொதுவானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 8 குணாதியங்கள் உங்களிடம் இருந்தாலே போதும், நீங்களும் சிறந்த `டீம் லீடர்தான்'. அவை...
தலைமைப் பணியில் இருப்பவர்கள், தன்னுடைய வளர்ச்சியை மட்டும் பெரிதாக நினைக்காமல், சக ஊழியர்களின் திறன்களைக் கண்டறிந்து, அந்தத் திறன்களை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். இது தலைமைப் பணியில் இருப்பவரின் மீது ஈர்ப்பை உருவாக்கும்.
மாற்றங்களைக் கடைப்பிடிப்பதில் முதல் நபராக இருக்க வேண்டும். நிறுவனத்தில் ஏதேனும் புதுமையைக் கொண்டு வரும்போது அதை வரவேற்று செயல்படுத்துவதில் முதல் நபராக இருக்க வேண்டும். இது மற்றவர்களை ஊக்கப்படுத்தும்.
நிகழ்வுகளுக்கும் இடத்துக்கும் தகுந்தாற்போல் தலைமைப் பண்பைப் பயன்படுத்துவது பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தரும். தேவைக்குத் தகுந்தாற்போல் செயல்படுவதால், வெற்றிக்கனியை எளிதில் ருசி பார்த்துவிடலாம்.
வேலையை விடுபவர்களில் அதிகம் பேர் மேலாளர்களைப் பிடிக்கவில்லை என்றுதான் சொல்கிறார்கள். பணியில் இருப்பவர்களுடன் சகஜமாகப் பழகுவது மிகவும் முக்கியம். அப்போதுதான் குழுவை எளிதாக அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.
பணியாளர்களில் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், ஒரு சிலருக்கு எதிராகவும் செயல்படக் கூடாது. இதனால் நல்ல நிலையில் உள்ள பணியாளர்களிடையே விரிசல் உருவாகும். அதனால் பணியாளர்கள் மத்தியிலும் சரிசமமாகப் பழக வேண்டும்.
எந்தப் பிரச்னை வந்தாலும் முதலில் பதற்றப்படாமல் எதிர்கொள்ள வேண்டும். பதற்றமான சமயத்தில் நிதானத்தை இழந்துவிடக் கூடாது. தெளிவான சிந்தனையுடன் செயல்படும்போது எதிர்வரும் பிரச்னைகள் பலவற்றைத் தவிர்க்கலாம்.
நல்ல தலைமைப் பண்பு வேண்டும் என்றால் தகவல்களை துல்லியமாக பரிமாறும் திறன் அதிக அளவில் இருக்க வேண்டும். பணியாளர்களிடமிருந்து எளிதில் தகவலையும், மேம்பாட்டுக்கான ஆலோசனைகளையும் பெறுகிற மாதிரி அவர்களுடன் நெருங்கிய உறவை வைத்திருக்க வேண்டும்.
சின்னச் சின்ன விஷயங்களைக்கூடக் கவனமாகப் பார்த்து, என்னென்ன விஷயங்கள் சொல்லப்படுகின்றன என்றும், என்னென்ன விஷயங்கள் சொல்லாமல் மறைக்கப்படுகின்றன என்றும் அலசி ஆராய்ந்து, அனைத்தையும் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
source https://www.vikatan.com/ampstories/business/news/8-important-leadership-qualities-you-should-develop-to-become-a-good-team-leader
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக