விகடன் டெவிஸ்டாஸ் தயாரிப்பில் 2003-ல் வெளிவந்த 'கோலங்கள்' தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து 'திருமதி செல்வம்', 'தென்றல்', 'தெய்வமகள்', 'நாயகி' எனப் பல தொடர்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. இன்றளவும் அந்தத் தொடர்கள் அனைத்தும் வெகுவாக பேசப்படுகின்றன.
Also Read: AKS - 4|சிவாவின் கோபமும், சில பெற்றோர்கள் ஏற்படுத்தும் மன உளைச்சலும்!
அந்த வகையில் இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸாக வெளியான விகடனின் 'வல்லமை தாரோயோ' தொடர் இணையத்தில் ஒரு புதுமை செய்து சாதனை படைத்தது. அதேபோன்று, தற்போது வெளியாகியிருக்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' இன்றைய நியூ ஜென் இளைஞர்களின் ஃபேவரைட் தொடராக மாறியிருக்கிறது. தற்கால ஓடிடி தலைமுறை இளைஞர்களை மனதில்கொண்டு அவர்களின் வாழ்க்கைமுறையை, கலாசாரத்தை, எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் ஒரு தொடராக இது உருவாகியிருக்கிறது.
இந்தத் தொடர் தற்போது விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. மிஸ் பண்ணியிருந்தா மறக்காம பார்த்திட்டுங்க.
பார்த்தவங்க இந்த சீரிஸ் எப்படி இருக்குன்னு கமென்ட்ல ஷேர் பண்ணுங்க! அப்படியே இதுல உங்க ஃபேவரைட் கதாபாத்திரம் யாருங்கறதையும் மறக்காம சொல்லுங்க.
source https://cinema.vikatan.com/television/aadhalinal-kaadhal-seiveer-now-a-favorite-show-among-the-youngsters
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக