கொரோனா தொற்றிலிருந்து மீண்டதிலிருந்து கடந்த இரண்டு மாதங்களாக தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன். இது கொரோனாவின் பின்விளைவாக இருக்குமா? அதிலிருந்து மீள்வது எப்படி?
- தியாகராஜன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
``கொரோனா தொற்று பாதித்து குணமடைந்த பிறகும் சிலருக்கு சில அறிகுறிகள் வருவதைப் பார்க்கிறோம். இந்த நிலையை `லாங் கோவிட்' என்கிறார்கள். இதைப் பற்றி கடந்த சில மாதங்களாகத்தான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம். இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்த தரவுகள் நம்மிடம் இல்லை. ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தூக்கமின்மையில் தொடங்கி, முடி உதிர்வு, நரம்பு தொடர்பான பாதிப்புகள் வரை பல பிரச்னைகள் கோவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்படலாம்.
Also Read: Covid Questions: தொற்றிலிருந்து மீண்டு 3 மாதங்களாகின்றன; படி ஏறி, இறங்க கடினமாக இருக்கிறது; ஏன்?
உங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன் தூக்கமின்மை பிரச்னை இல்லாமல், கொரோனா பாதித்து, குணமான பிறகுதான் அந்தப் பிரச்னை வந்திருக்கிறது என்றால் அது கொரோனா தொற்றின் பின்விளைவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. இதற்காக பிரத்யேக பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை. மருத்துவரைக் கலந்தாலோசித்துவிட்டு, சரியான காரணம் அறிந்துகொண்டு, அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைப் பின்பற்றினாலே சரியாகிவிடும்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/i-recovered-from-covid-recently-but-now-i-became-insomniac-is-there-any-solution
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக