Ad

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சிம்பிளான வெங்காயத்தாள் சாதம்! - ஆரோக்கிய சமையல்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாளை பெரும்பாலும் சமையலில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் தான் பயன்படுத்துகிறோம். அதனை வைத்து எப்படி சாதம் செய்வது என்பதை பார்ப்போம்..

தேவையான பொருட்கள் :-

வெங்காயத்தாள் - 1 கட்டு

உதிராக வடித்த சாதம் - 2 கப்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

வேக வைத்த - பட்டாணி அரை கப்

வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் - அரை டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

அரைக்க :-

காய்ந்த மிளகாய் - 7

பூண்டு பல் - 3

Representational Image

செய்முறை :-

முதலில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் வெங்காயம், பட்டாணி மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் வடித்த சாதத்தை போட்டு கிளறி சோயா சாஸ், உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறிவிடவும். இப்போது சுவையான வெங்காயத்தாள் சாதம் தயார்.

ஆரோக்கியமான கேரட் சப்பாத்தி எப்படி செய்வது

தேவையானப் பொருட்கள் :

கேரட் - 3 (துருவியது)

கோதுமை மாவு - 1/2 கிலோ

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

Representational Image

செய்முறை :

முதலில் கேரட்டை தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, இரண்டு டீஸ்பூன் நெய் மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து நன்றாக கலந்த பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்னர் அரை மணி நேரம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்து கொள்ளவும். பின்னர் மாவானது ஒரு 10 நிமிடம் ஊறியதும், அதனை சப்பாத்தி போல் தேய்த்து வைத்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை முன்னும் பின்னும் நெய் தடவி வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான கேரட் சப்பாத்தி தயார்!!


- ஏ.எஸ்.கோவிந்தராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-explains-how-to-cook-onion-spring-rice

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக