சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள், நெஞ்சை முள் கொண்டு தைக்கும் சம்பவங்களாகவே அமைந்துவிடுகின்றன. நேற்று (29.08.2021) இரவு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த கோரவிபத்தும் அப்படியானதே. காஞ்சிபுரம், சென்னையை சேர்ந்த 6 நபர்கள், கார் மூலம் ஊட்டி வரை சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். சுற்றுலாவை முடித்து நேற்று இரவு சென்னை நோக்கிபடி காரில் பயணப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் அருகே உள்ள புறவழிச்சாலையில் வந்தபோது, அந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் பயணிகளுடன் சேலம் நோக்கி பயணித்த அரசு பேருந்தில் அதிபயங்கரமாக மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் அந்த கார் அப்பளம் போல நொறுங்கிள்ளது. காரில் பயணித்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இமானுவேல், எபினேசர் பெஞ்சமின், சென்னையை சேர்ந்த மோனிக்கா, ரபேக்கால், ஜெசி, ஜோஸ்வா உட்பட்ட ஆகிய 6 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படை மற்றும் காவல்துறை அதிகாரிகள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காரில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சுமார் 35 பயணிகளுடன் பயணித்த அரசு பேருந்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தியாகதுருகம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்றதான கோர விபத்துக்கள் மனதை பதைபதைக்க வைக்கும் சம்பவங்களாகவே அமைந்துவிடுகின்றன. 'செல்லும் காரியம் அவசரம்' என்று மட்டுமேபார்க்காமல், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வாகனத்தை சாலையில் இயக்குவதால், நமக்கு மட்டுமல்ல நம் எதிரில் வரும் பலரது வாழ்வும் பாதிக்கப்படாமல் இருக்கும்.
source https://www.vikatan.com/news/accident/six-persons-are-died-on-road-accident-in-kallakurichi-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக