விகடனின் Doubt of Common Man பக்கத்தில் வேலுச்சாமி என்ற வாசகர், "எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனாலும் கால் வலி இருந்து கொண்டே இருக்கிறது. நான் இப்போது தடுப்பூசி போடலாமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்
கடந்த இரண்டு வருடங்களாக உலக மக்களை இயல்பான வாழ்க்கையை வாழ விடாமல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா என்னும் பெருந்தொற்று. கொரோனாவுடன், கொரோனாவை எதிர்த்து நாம் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். எனினும், கொரோனா வைரஸ் பரவல் குறித்தான அச்சமும், சந்தேகங்களும் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. அதேபோன்று கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிக் கிட்டத்தட்ட அரை வருடம் முடிவடைந்த நிலையிலும், கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. இதேபோன்று கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகம் நமது வாசகர் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் கேட்டிருந்தார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
வாசகரின் சந்தேகத்திற்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். "கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது என்றால் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கால்வலி இருப்பதால் கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும், கால்வலிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. முக்கியமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது என்றாலே தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதலே சிறந்தது" என்றார்.
கொரோனா குறித்து இது போன்று சந்தேகங்கள் இருப்பின் அவற்றை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
கொரோனா வந்தபின் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் மிகவும் முக்கியம்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
source https://www.vikatan.com/health/healthy/doubt-of-common-man-i-got-affected-for-covid-before-3-months-can-i-get-vaccination-now
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக