Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

வழி காட்டும் கருட புராணம்... மகாளய பட்ச நாள்களில் செய்ய வேண்டிய 30 நன்மைகள் என்னென்ன?!

மகாளய பட்ச நாள்களில் பித்ருக்களை எண்ணி செய்யப்படும் ஒவ்வொரு நல்ல காரியத்துக்கும் மிகுந்த பலன்கள் உண்டு என்கின்றன சாஸ்திரங்கள். பித்ருக்களுக்காக வழிபாடுகள், படையல், ஹோமம், திதி, தர்ப்பணம் இவற்றோடு தானங்களும் அவசியம் எனப்படுகிறது. பித்ருக்களின் லோகம், இறந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றி விளக்கும் கருட புராணம், இந்த மகாளய பட்ச நாளில் செய்ய வேண்டிய நன்மைகளைப் பற்றியும் விளக்கி உள்ளது.
கருட புராணம்

மகாளய நாள்களில் ஹோமமும் பித்ரு வழிபாடும் தவறாது செய்பவர் ஆரோக்கியவானாக கீர்த்தி மிக்க சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.

ஷோடச மகாலட்சுமி பூஜையை நடத்தி அன்னமிடுபவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்கும்.

பித்ருக்களுக்காக செய்யப்படும் எந்த வழிபாட்டு சடங்கும் சகல தோஷங்களையும் நீக்கி உங்களை நரகத்தில் வீழ்ந்து விடாமல் தடுக்கும்.

பித்ருக்களை எண்ணி கோ தானம் செய்பவர்கள் 1000 ஆண்டுகள் கோலோகத்தில் வாழ்வர்.

குடைதானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் வாழ்வர்.

ஆதரவற்றோருக்கு பாத்திரங்கள், நெய், போர்வை, பாய் இதில் எதை தானம் செய்தாலும் சந்திர லோகத்து சுகங்களை அனுபவிப்பர்.

பசு தானம்

வஸ்திர தானம் கொடுத்தவர் 1000 ஆண்டுகள் வாயு லோகத்தில் வாழ்வர்.

ஆலயத்துக்கு பசு தானம் கொடுத்தவர் இந்திரனுக்கு சமமான வாழ்வை மேலோகத்தில் அடைவர்.

கோயிலுக்கு குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவர் 14 இந்திரன் காலம் வரை வருண லோகத்தில் வாழ்வர்.

ஆலயத்துக்கு நந்தவனங்களை அமைத்துக் கொடுப்பவர் ஒரு மன்வந்தர காலம் வாயு லோகத்தில் வாழ்வர்.

தானியங்களையும், காய்கறிகளையும் தானம் கொடுத்தவர் மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்.

வைகுந்தம்

பிரதிபலன் பாராது தானம் செய்பவரின் இறுதி நாள்கள் உன்னதமாயிருப்பதோடு மீண்டும் பிறவியும் எடுப்பதில்லை.

ஏழைகளுக்கு ஒரு நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரிய லோகத்திற்கு செல்கிறார்கள்.

தீர்த்த யாத்திரை செல்ல உதவுபவர்களுக்கு சத்தியலோக வாசம் கிட்டுகிறது.

Also Read: மகாளய பட்சம்: இந்த நாள்களில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன தெரியுமா?

கன்னிகா தானத்துக்கு உதவினால் 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் வசித்திருப்பர்.

ஆலய திருப்பணிக்கு பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவர் குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வர்.

ஏழைகள் மருத்துவம் செய்ய பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வர்கள்.

தானம்

நீர் நிலைகளை சீர்திருத்தினாலும் உண்டாக்கினாலும் ஜன லோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.

பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்.

கோபுரம் கட்டும் செலவினை ஏற்பவர் பல காலம் பரம பதத்தில் வாழ்வர்.

இறைவன் உலா வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் பல காலங்கள் இந்திரலோகத்தில் வாழ்வார்கள்.

பௌர்ணமியில் அன்னதானம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.

தாமிரப் பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவர், மீண்டும் நற்குலத்தில் உதித்து திடகாத்திரமான கீர்த்தியோடு வாழ்வார்.

பசித்தவர்களுக்கு பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் இன்புற்று இருப்பர்.

கருட புராணம்

தாகத்தில் தவித்தவர்களுக்கு நல்ல தண்ணீரை தானம் கொடுத்தவருக்கு கயிலாய வாசம் கிட்டும்.

சூரிய உதயத்தில் கங்கையில் நீராடுபவர் 6000 ஆண்டுகள் பரம பதத்தில் இருப்பர்.

குழந்தைகள் வித்யாரம்பம் செய்ய உதவுபவர் பிரம்ம லோகத்தில் இன்புற்று வாழ்வர்.

அநாதைகள் உயர்வு பெற உழைப்பவர்கள் வைகுந்ததில் சிறப்பொடு வாழ்வர்.

ஆதரவில்லாத முதியோருக்கு அடைக்கலம் அளிப்பவர் சிவலோகத்தில் சீரோடு வாழ்வார்கள்.

விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைப்பிடிப்பவர் 14 இந்திர ஆயுள் காலம் வரை சொர்க்கபுரியில் இருப்பர்.



source https://www.vikatan.com/spiritual/gods/30-benefits-told-in-karuda-puranam-for-mahalaya-patcha-worship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக