Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

அப்பன் சாமி! - சிறுகதை

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காவியன் மேகாலயாவிற்கு இந்த காண்ட்ராக்ட் ஒர்க் எடுத்து வந்து ஐந்து மாதம் ஆகிவிட்டது.

லால்குடியில் சுந்தரம் வாத்தியார் பையன் என்று இருபது வருடம் முன் அறியப்பட்டவன், தனக்கான உலக அடையாளத்தை தேடி இந்த கஷ்டமான கான்ட்ராக்ட்டை பிடித்து வந்துள்ளான். அம்மா ஜெகதாம்பாளும் டீச்சர். லால்குடி சிவன் கோயில் பெரிய அய்யர் பொண்ணு நந்தினியும் இவனும் லவ் பண்ணி , இன்ஜினியரிங் படிக்கும் இறுதி வருடமே மாலையும் , கழுத்துமாக வீட்டிற்கு அழைத்து வந்தான். அவனுக்கு இருபது, அவளுக்கு பதினெட்டு. ஊரையே பஞ்சாயத்துக்கு கூட்டி வந்த ராஜா அய்யரிடம் சுந்தரம் உட்கார்ந்து சமாதானம் பேசியதை மேல கொண்டையம் பேட்டையும், அக்ரஹாரமும் அமைதியாக பார்த்தது.

Representational Image

ஹெட்மாஸ்டர் ஆக இருந்து டிஸ்ட்ரிக்ட் CEO வாக ஆனதால் ஊரில் நல்ல மரியாதை. “ஏங்க பொண்ண தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுன பாவம் இந்த கணக்கு பிள்ளை வம்சத்தை சும்மா விடாது, நான் பட்ட கஷ்டத்தை நீயும், உன் புள்ளைங்களும் படுவானுகடா டேய் ” ராஜா அய்யர் தூக்கி விசிறியெறிந்த மணல் ரொம்ப நாள் காவியன் காலில் தட்டு பட்டது. அவர் சாபத்தினால் தான் பதினைந்து வருடங்கள் குழந்தை பிறக்கவில்லையோ என்ற நினைப்பு அவனை கொல்லாமல் கொன்று தீர்த்தது.

ஆனால் நந்தினி ஜெம், ஒரு நாள் கூட அப்பனின் சாவை காவியனோட முடிச்சு போட்டதே இல்ல. அவர் சனிஸ்வரர் சன்னதி பக்கத்து மாடத்தில் கயிறை மாட்டி மேலே போய் சேர்ந்து பத்து வருடம் கழித்து தான் லட்சுமி பிறந்தாள்.

லட்சுமி பிறப்பதற்கு முன் சரியாக மூன்று வருடங்கள் மாச பிரதோஷம் வந்தால் தவறாமல் LOP லீவு போட்டு லால்குடி சிவனிடம் பிள்ளை மனு போட்டு வருவான்

இந்த ட்ரிப்பில் கொஞ்சம் ஹெல்த் பற்றி கவலைகள் வந்து இருந்ததால் , மேலும் அவனை போலவே நாற்பத்தியேழு வயசு ஒரு காலேஜ் நண்பன் திடீர் என ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனது எச்சரிக்கை மணி அடித்து இருந்தது. டெய்லி 10km டார்கெட் வைத்து ஒரு ஆறு மாசம் ஆகி விட்டது. ஊரில் இருந்த போது அந்த அளவுக்கு முடியவில்லை. மேகாலயா வந்தவுடன் , பேச்சிலர் வாழ்க்கையும் , மலைகளும் , பச்சை பச்சைகளும் விடாமல் தொடர உதவியது. மொத்தமே நாலு அஞ்சு நாலு நாள் தான் மிஸ் பண்ணி இருப்பான்.

“கால் மீ, அர்ஜன்ட் “ என்ற நந்தினியின் மெசேஜ் இப்ப தான் ஒளிர்ந்தது. போன் அடித்தால் முதல் ரிங்கில் எடுக்க இப்ப என்ன புது காதலர்களா அப்படினு நக்கல் பண்ணிகிட்டே இருப்பான் காவியன். அடித்த முதல் ரிங்கிலேயே எடுத்த நந்தினி, “வாழ்த்துக்கள் சார்" என்றாள்.

ஒன்றும் புரியாத காவியன், “என்னடி வாழ்த்துக்கள் , நக்கலா ? மேட்டரை சீக்கிரம் சொல்லு , ரன்னிங் போயிட்டு வந்து இப்ப தான் கீய்சர் போட்டு இருக்கேன். எதாவது நம்ம வழக்கமான பஞ்சாயத்து அப்படினா , குளிச்சுட்டு வந்து பொறுமையா பண்ணலாமா?“ கடுப்பான குரலில்.

இரண்டு நாட்களாக திருமழபாடி குலதெய்வம் கோவில் போறது சம்மந்தமா ரெண்டு பேருக்கும் சண்டை.

நந்தினி சிரிப்பு சத்தம், அந்த பக்கம்.

“என்ன சார், சுந்தரம் வாத்தியார் & ஜெகதா டீச்சர் போனா போதாதா இந்த பங்காளி பூஜைக்கு.

கருப்பு கோவமா இருக்காரா ? காவியன் கோவமா இருக்காரா ?

சரி.. மேட்டர் தெரிஞ்சா, உங்க குடும்பமே உழுந்து புரண்டாலும், கருப்பு கெட் அவுட் சொல்லிடுவார் , அநேகமா இன்னும் ரெண்டு வாரத்துக்கு உங்க பங்காளி குரூப்புக்கும் ஆப்பு தான் நினைக்கிறேன்.

Representational Image

வாழ்த்துக்கள், எதுக்குன்னு கேட்டா பதில் தெரிஞ்சுடும், அன்பின் காவியன் பிரதர்..”

நக்கல் மோட் ஸ்டார்ட் ஆகுது என்று தெரிந்து குழப்பமான காவியன் “ஏதோ பெருசா பிளான் பண்றா சண்டாளி” மைண்ட் வாய்ஸில் மட்டுமே பேச முடிந்த பல வசனங்களில் இதையும் சேர்த்து கொண்டான்.

பால்கனியில் இருந்து தெருமுனை லைட்டின் கீழ் நிற்கும் ஆளை உற்று பார்த்தான். கஞ்சா ஜெகஜோதியாக விற்பனை ஆகும் நேரம், மணி ஆறு. கல்லூரி படித்தவுடன் முதல் போஸ்டிங் மேகாலயா தான் காவியனுக்கு. மேகாலயாவில் ஐந்து மணிக்கே இருட்டி விடும். சென்னையின் எட்டு மணி இருளை ஐந்து மணிக்கு சந்திப்பதில் அவனுக்கு கொஞ்சம் சிரமம் இருந்ததால் தான் change.orgல் இந்தியாவில் டைம் சோன் அறிமுகம் செய்ய சொல்லி ஒரு பெட்டிஷன் போட்டான். அது வைரலானதில் மேகாலயா டைம்ஸ் நிருபர் வந்தனா வீட்டுக்கு போட்டோக்ராபர் வசம் வந்து எட்டு காலம் பேட்டி கொடுத்தது ஞாபக நிழலில் வந்த போனது. பேட்டி சுந்தரம் வாத்தியாரை டென்ஷன் ஆக்கியது தான் மிச்சம், ஒரு கட்டத்தில் இந்தியா டைம் சோன் மாற்ற ராகுல் காந்தி வந்தால் தான் விடியும் என நினைத்து விட்டு விட்டான்.

“இன்னிக்கு பெரிய டவர் எரெக்சன்டி, பாதி வேலை தான் முடிஞ்சு இருக்கு. லோக்கல் பொலிடிக்ஸ் வேற கொஞ்சம் வேற மாதிரி போகுது. நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு சாப்பிட்டுட்டு , ஆறு மணிக்கு சைட் போனா தான் இந்த வார வேலை முடியும். ஓவர் டைம் கொடுத்தாலும் சனி ஞாயிறு வர மாட்டேங்கிறாங்க லேபர்”

“சொல்லுடி செல்லம், கருப்பு உன் கனவிலே ஏதும் வந்தாரா, வர சொல்லிட்டாரா திருமழபாடிக்கு ? என்ன மேட்டர் …”

சிரித்து கொண்டே காதல் மனைவியுடன் இரண்டு நாள் ஊடலை கடந்தான் காவியன்.

நந்தினி, “உங்க லட்சுமி பொண்ணு உக்காந்திட்டா தலைவா , துட்டு எல்லாம் சேர்த்துட்டீரா , மக்கு அக்காவை உலக மகா ஆர்ட்டிஸ்ட் ஆக்க ?” பயங்கரமான சிரிப்பு அவளிடம் இருந்து.

Representational Image

நின்று கொண்டிருந்த காவியனுக்கு சட்டென்று உட்கார வேண்டும் போல இருந்தது. காதில் போனை வைத்து கொண்டே டைனிங் ஹாலில் இருந்த சேரை எடுத்து கொண்டு பால்கனி வந்தான் ”என்னடி சொல்ற” கொஞ்சம் ஆச்சரியம் கலக்க முயற்சி செய்து தோல்வியே அடைந்தான்.

நந்தினி ஒன்றரை வருஷமாகவே “ரொம்ப வளருது கழுதை” என்று ஹெயிட் அலாரம் அடித்து கொண்டே இருந்ததால் எதிர்பார்த்தது தான் அது, என்ன ஊரில் அவனில்லாத நேரம் தான் மனசை கொஞ்சம் கலைச்சு போட்டது.

“என்ன சார், ஒன்னும் சுரத்தே காணோம் ? இப்ப தான் பாதர் லெவல் 2.0 வந்து இருக்கீங்க சார்.

ஒரு செலிப்ரஷன் டோன் கூட காணோம்”

நந்தினி நக்கல் மோட் ONல் இருந்து மாறவே இல்லை.

“இல்லடி யோசனை எங்கயோ போய்டுச்சு “

“எங்க ? கருப்பசாமிக்கு apology நோட் எப்படி எழுதலாம் அப்படினா ?

“நீ ரொம்ப நக்கல் பண்ணுற, அவ எங்க ? லட்சுமிக்கு கொடு போனை …

ரொம்ப பிளட் வந்துச்சா ? மயக்கம் ஏதும் போட்டுட்டாளா தங்கம் ?

பயந்து இருக்கும் புள்ள இந்நேரம் ?”

சுதாரித்து கேள்விகளை அடுக்க ஆரம்பித்தான்.

“அய்யா இங்க என்ன வேலைக்கு இன்டர்வியூ நடக்குதா ? நாங்களும் ஏஜ் அட்டென்ட் பண்ணி தான் உங்களை லவ் பண்ணிருக்கோம் தம்பி ..

ஒன்னும் பிரச்னை இல்லை, எதிர் வீட்டு பாட்டி வந்து தண்ணி ஊத்துனாங்க.

அவ டிரஸ் பண்ண போய் இருக்கா. கால் மணி ஆச்சு. என்ன எழவோ , கதவை லாக் பண்ணிட்டு டிரஸ் பண்ணுது இன்னிக்கு கழுதை . என்னைய கூட உள்ளார விடல. கால்கால்ன்னு கத்திக்கிட்டு ரூம் வாசலில் நின்னு தான் உங்ககிட்ட பேசுறேன்.“

Representational Image

“சாயங்காலம் அவ பிரகதியோட டென்னிஸ் விளையாட போயிட்டு வந்தது பின்னாடி ரூம் உடனே போய் கதவை சாத்திக்கிட்டா, கொஞ்சமாக சந்தேகம் இருந்தது விளையாட்டுல ஏதாவது சண்டையோ அப்படினு”


“எவ்ளோ தட்டியும் கதவை திறக்கவே இல்லை. கேட்டா வயித்து வலி, ரெஸ்ட் எடுக்குறேன் அப்படினா உங்க செல்லம் முதலில.”

“அப்புறம் டூப்ளிகேட் கீ வச்சு திறந்து உள்ளார போய் பார்த்தா ஸ்க்ர்ட் பின்னாடி எல்லாம் ரத்தமான ரத்தம். அதை பாத்ரூமில் வச்சு வாஷ் பண்ணிக்கிட்டு இருந்தது கண்ணு .என்னை திடீர்ன்னு பார்த்த பின்னாடி ஒரே தாரை தாரையா கண்ணுல தண்ணி வருது. உங்கள மாதிரி கண்ணு வேர்த்திருக்கோ அப்படி எனக்கு டௌட்”

“அம்மா சாரிம்மா , எப்படி பிளட் வந்துதுனே தெரியலம்மா. இனிமே பார்த்து விளையாடுறேன்மா. ப்ளீஸ் , சாரிமா. நானே வாஷ் பண்றேன் இதை ” அப்படிங்கிறா.

எனக்கு ஒரே சிரிப்பு. அடக்கவும் முடியல. “

“வயசுக்கு வந்து அழுற பொண்ணு பிளட் பார்த்து சிரிக்குற அம்மா இதை போல இருப்பாங்களாப்பா?”

நந்தினி கேள்விக்கு பதில் தெரிந்தாலும் சொல்ல மாட்டான் காவியன், காதல் கல்யாணம் ஆனாலும் வீட்டுக்கு வீடு வாசற்படி மேட்டர் மாறவே இல்லை

“நான் விழுந்து விழுந்து சிரிக்கிற அதை பார்த்து உங்க அறிவாளி செல்லத்துக்கு ஒரே குழப்பம் ஆயிடுச்சு. பெரிய காமெடி தான். நான் உடனே போய் அப்புறம் எதிர் வீட்டு அமிர்தாவோட பாட்டி கூட்டிட்டு வந்து தலைக்கு தண்ணி ஊத்திட்டேன். “

நந்தினியின் குரல் சர்ப்பட்டா பட கிளைமாக்ஸில் கேட்ட பறையோசை போல் இருந்தது காவியனுக்கு.

“அப்புறம் சொல்லுங்க சார். மென்சுரேஷன் பற்றி எப்ப கிளாஸ் எடுக்க போறீங்க? மனசுல பிளானிங் போட ஆரம்பிச்சு இருப்பிங்களே இந்நேரத்துக்கு ..”

காவியன் நந்தினியோட ஸ்க்ரின்ப்ளே கேட்டுட்டு யோசனையோடு பால்கனியை கிழக்கு-மேற்கா அளக்க ஆரம்பிச்சான்.

“இல்லடி நல்ல நியூஸ்தான். சும்மா வாட் நெக்ஸ்ட் பற்றி ஜிந்திச்சு பாக்கலாம் ட்ரை பண்ணினேன் ” வடிவேலு குரல் ட்ரை பண்ணி கூல் டௌன் மோட்ல் இருப்பதாக காதல் நந்தினியை நம்ப வைக்க ட்ரை பண்ணினான்.

“ஆமா நீங்களும் உங்க வாட் நெக்ஸ்ட்’ம் ..

இருங்க அம்மாடி வந்துட்டாங்க பேசுங்க”

“செல்லம்

என்னமா… கங்கிராஜூலேஷன்ஸ் தங்கம்..”

“என்னப்பா, எதுக்கு கங்கிராட்ஸ் எல்லாம் ?” புரிந்தும் புரியாமலும் வெட்கம் முளைத்தது லட்சுமிக்கு.

“நீ “பெரிய பொண்ணு” ஆகிட்ட இன்னிக்கு , அதுக்கு தான்..”

“டேட்டா போனா பரவாயில்ல, வீடியோ ஆன் பண்ணுடா தங்கம்..”

Representational Image

அம்மாவிடம் மூலையில் இருக்கும் பிளாஸ்டிக் பேக்கில் இருக்கும் ரத்தம் படிந்த டிரெஸ்ஸை சைகை காட்டி , போனையும் காட்டி என்னமோ கேட்டாள்.

நந்தினிக்கு புரியாததால், “அப்பாகிட்ட சொல்லிட்டியா ?” போனை தள்ளி வச்சுக்கிட்டு கேட்டாள் புது “பெரிய பொண்ணு” லட்சுமி .


நந்தினி புரியாத மாதிரியே, சிரித்து கொண்டு , “ஏய் சும்மா பேசுடி , உலகத்திலேயே அதிசய பொண்ணு வயசுக்கு வந்துட்டா. அதிசய அப்பன் பேசுறார். அப்படியே ஓவரா சீன் போடாதீங்க ரெண்டு பேரும்.” நக்கல் மோட் ON ஸ்டில்.


நந்தினி பேசியது காவியன் காதில் விழுந்தது.

லட்சுமி தர்ம சங்கடமாக ஃபீல் பண்ணுவா என்று நினைத்தான்.


அதற்குள் குளித்து மாற்றிய புது டீ ஷர்டை சரி பண்ணி கொண்டு வீடியோ ஸ்ட ஸ்டார்ட் செய்தாள், “சொல்லுங்க அப்பா. அது ஒண்ணும் இல்லப்பா

இந்த அம்மா ஓவரா பில்டுஅப் கொடுக்குது .

விளையாடுறப்போ ஏதோ பட்டுடுச்சு போல.

போய் அமிர்தா பாட்டியெல்லாம் கூட்டி வந்து அமர்க்களம் பண்ணிடுச்சுப்பா.

அவங்க ஏன் என்னைய தண்ணி ஊத்தி குளிப்பாட்டுனாங்கன்னு புரியவே இல்லப்பா.“


கம்பளைண்ட் மோட்ல் செல்ல பெண்ணை கேட்டவுடன் காவியன் ,

“செல்லம் , நான் சொல்றது லிஸ்டன் பண்ணு , ஜாக்கிரதையா..”

நீ ஏஜ் அட்டென்ட் பண்ணி இருக்க கண்ணு.

உங்க லூசு அம்மாவுக்கு ஒன்னும் தெரியாது. நான் சொல்றதை கேளு. கேட்கறியா ?”


கொஞ்சம் குழப்பமான லட்சுமி “ சொல்லுப்பா, நீ சொல்றது ஒண்ணுமே புரியலப்பா” என்றாள்.


காவியன் எப்படி விளக்குவது என யோசித்தான்.

கண் முன் சிறகடித்த பட்டாம்பூச்சியும், என்றோ படித்த சுஜாதா எதோ ஒரு பட்டாம்பூச்சி சயின்ஸ் கதையும் அலையடித்தது.

கொஞ்சம் யோசனைக்கு பின், “இந்த மெட்டாமார்பசிஸ் படிச்சது ஞாபகம் இருக்கா ?”

“இருக்குப்பா”

“egg - லார்வா - pupa - அடல்ட் , நாலு ஸ்டேஜ் தெரியுமா”

“ஆமாம்ப்பா..”

கொஞ்சம் ரிலீவ் ஆன காவியன் ,

“அம்மா வயித்தில இருந்தப்ப நீ முதலில egg ஸ்டேஜ். அப்புறம் நீ ஓடி ஆடி நடந்து விளையாடின இல்ல , ஒரு அஞ்சாவது கிரேட் முடியும் ?

“ஆமாம்பா”, இப்ப டென்சனும், குழப்பமும் தீர்ந்து தன் கதை சொல்லி அப்பன், தன் கதையே சயின்ஸ் ஆக்கி சொல்வதை இன்டரெஸ்ட்டாக கேட்க ஆரம்பித்தாள்.

“அது முடிஞ்ச பின்னாடி கேட்டர்பில்லர் லார்வா இருக்கில்ல. நீ சிக்ஸ்த் , செவென்த் கிரேட் போல, லாஸ்ட் ரெண்டு வருஷமா நல்லா ஹெயிட் ஆகிட்டு இருந்தில்ல , அது தான்”

Representational Image

“ஆமாம்பா , நீ தான் பாஸ்கெட் பால் கோச்சிங் டைம் இல்ல அப்படி சேர்த்து விட மாட்டேனுட்ட. விளையாண்டு இருந்தா இன்னும் ஹெயிட் கூட ஆகி இருப்பேன் ..”

காசு தான் காரணம் என்பது லட்சுமி குட்டிக்கு தெரிந்து இருந்தது. இந்த ரெண்டு வருஷமா ஏதோ இன்ஜினியரிங் காண்ட்ராக்ட் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுதுல்ல இருந்து, மாசம் கடைசி வாரம் அம்மாவுடன் ரெகுலரா நடக்கும் சண்டையும் , சேர்ந்து வாக்கிங் போகும் போது ஸ்கூலில் புதியதாக வந்த அபினவின் கனடா போய் திரும்ப வந்த கதையை கேட்காமல் யோசனையில் ஆழ்ந்து விடும் அப்பனின் டென்சன் முகமும் மைண்ட்ல வந்து போனது. பேசி கொண்டே அவள் ரூமில் போஸ்டராக வாழும் ஒலிம்பிக் கேப்டன் ஆகான்ஷா சிங் கீழ் போய் நின்று, அது மேல் ஒட்டி இருந்த அந்த ஆட்டோகிராப்பை தடவிக் கொடுத்தாள். லட்சுமியின் ரோல் மாடல், டெய்லி கண் விழிக்கும் முகம்.

காவியன் காண்ட்ராக்ட் பிசினஸ் முன்னாடி, கொரியா வேலையில் இருந்தப்போ, கடைசி ஆறு மாசம் லட்சுமி, நந்தினியை சொந்த செலவுல விசா போட்டு கூப்பிட்டு இருந்தான். அவனுக்கு அவன் பொண்ணு தான் சின்ன புள்ளைல பார்க்காத உலகத்தை எப்படியாவது பாக்க வச்சுடுனமுன்னு ரொம்ப ஆசை. அமெரிக்கா கனவுல மூணு வருஷம் H1B போட்டு லாட் கிடைக்கவே இல்ல , சாப்ட்வேர் காரனுகள தான் அமெரிக்காகாரன் கூப்பிடுவானுட்டு விட்டுட்டான். 2014ல் கொரியாவில் நடந்த ஏசியன் கேம்ஸ்க்கு கூட்டி கொண்டு போன போது லட்சுமிக்கு வயசு ஏழு. எப்படியோ அந்த ஆகான்ஷாவோட ஸ்டைலில ஏதோ ஒன்னு அவளுக்கு புடிச்சி போச்சு. மேட்ச் தோத்தாலும் , அவங்ககிட்ட வாங்கின ஆட்டோகிராப் அவளுக்கு ரொம்ப இஷ்டம் ஆயிடுச்சு .


லட்சுமிக்கு பிடிச்ச பாஸ்கெட் பால் போஸ்டர் கீழ் நிற்பதை பார்த்த காவியன் , பிளாஷ்பேக் மோட்ல் இருப்பாள் என சரியாக கெஸ் செய்தான் காவியன் , “ என்னடா செல்லம் லைன்ல இருக்கியா ?”

“சொல்லுப்பா, எதாவது கேட்டியா ?”


“ஆமாண்டா , பட்டர்பிளை நாலு ஸ்டேஜ்…

நம்ம பேசிக்கிட்டு இருந்ததில இருந்து பாஸ்கெட் பால் டிரீம்க்கு போய்டியா ?” சிரித்து கொண்டே கேட்டான்.

அப்பனும் மகளும் அந்நியோன்னியமாய் கதைப்பதை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டே இருந்தாள்.

நந்தினி, மனதில் மகிழ்ச்சியும், உதட்டில் புன்னகையும் தெரிந்தது.

சைகையிலேயே “வெளிய போ” என்ற மகளின் கையை தட்டி விட்டாள்.

போனை பிடுங்கி “என்ன ஏந்தர்ப்ரனர்ர்ர்ர் , பொண்ணுக்கு சயின்ஸ் கிளாஸ் எடுக்கறாப்புல இருக்கு. நானும் ஜாயின் பண்ணலாமா ?”

திடீர் என நந்தினியின் குரலைக் கேட்ட காவியன் சிரித்து கொண்டே பதில் சொல்லலாமா வேணாமா என யோசித்தான்.

அதற்குள் அப்பன்சாமி தூங்கும் முன் ‘கடைசி’ வரம் கேட்க குட்டிசாமி போனை பிடுங்கி கொண்டது.

Representational Image

“இந்த அம்மா கிடக்குதுப்பா, நீ சொல்லுப்பா ..

லார்வா, அப்புறம் என்ன ஆகும் பா.. ?” படித்த சயின்ஸ் சொந்த வாழ்க்கையில் எங்க முடியும் என ஆர்வம் பற்றி கொண்டது அவளை.

“லாஸ்ட் ரெண்டு வருஷமா நீ வளர்ந்தில, அப்ப அதனால நீ pupa ஆகிட்ட. chrysalis ன்னு ஏதோ சொல்லுவாங்கல்ல”

“ஓ , அப்படியா , சரி அப்புறமாப்பா ?” கதையை தொடர்ந்தாள் காவியப்புதல்வி.


“இன்னிலேர்ந்து அந்த pupa கிட்ட இருந்து அடல்ட் வரும்ல , அது மாதிரி நீ அந்த கூட்டை உடைச்சு வருமே பட்டர்பிளை , அது ஆகிட்டடா கண்ணு.”

வெட்கமும், சந்தோஷமும் அந்த பக்கம் லட்சுமியின் முகத்தில்

“நாம கொரியாவில் இருந்து வரும் போது வினோத் அங்கிள் வீட்டுக்கு நாலு நாள் சிங்கப்பூர போனமே, அப்போ பட்டர்பிளை பார்க் பார்த்தது ஞாபகம் இருக்கா உனக்கு செல்லம் ?”

“ஆமாம்பா , அங்க பார்த்த பிங்க் -ரெட் பட்டர்பிளை மாதிரி அடல்ட் ஆகிட்டானா நானு ?”

கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் புதிதாக பூத்த பெண்மையின் பெருமிதம் பேச்சின் வாசத்திலேயே அவனுக்கு கேட்டது. டெய்லி இரவு கால் பிடித்து விட்டு அவளை கதை சொல்லி தூங்க வைப்பதும், பதிலுக்கு நெற்றி உச்சத்தின் அவள் கொடுக்கும் அன்பு முத்தமும் இல்லாமல், பொண்ணு கூட இந்த சமயத்தில் இருக்க முடியாமல் குமைந்தான் காவியன். வார்த்தைகள் மட்டும் இல்லாமல், கண்ணில் இருந்து கண்ணீரும் கொட்டியது.

அவனின் ஆன்லைன் உலகத்தில் அரசியல்வாதிகள் ஆனாலும் ஊடு கட்டி அடிப்பான். பயம் தெரியாது அவனுக்கு. எப்பவுமே காவியன் ரொம்ப எமோஷனல் ஆன ஆளு , பேமிலி மேட்டரில் மட்டும் .

மூச்சு விடாமல் கேள்வி கேட்க்கும் மகளை புத்தம் புதிதாக பெற்றது போல் ரசித்து கொண்டு இருந்த நந்தினி.

காவியன் உடனே, “அவ்ளோ தான் பேபி , நீ அப்பா பொண்ணு , சூப்பர் ஸ்மார்ட் டா !, சொல்றத்துக்கு முன்னாடியே கண்டு பிடிச்சிட்ட. சூப்பர் கண்ணு குட்டி…

இப்ப விஷயம் என்னனா, நீ பட்டர்பிளை ஆனதால் , மாசம் மாசம் அந்த பட்டர்பிளை மெட்டாமார்பசிஸ் மாதிரி உன் உடம்பில கொஞ்சம் சேஞ்சு நடக்கும்.

அம்மாவுக்கு மாசம் மாசம் பிளட் வரும் தெரியுமா ?”

“ஆமாம்பா, எனக்கும் அம்மா மாதிரியே வருமாப்பா ?” பெருமை போய் கவலை வந்து விட்டது லட்சுமிக்கு.

“வரும்டா செல்லம், ஆனா நோ ஒர்ரிஸ். சானிடரி நாப்கின் யூஸ் பண்ணிட்டு பிளைட் கூட ஓட்டலாம்டா.

டயர்டா இருக்கும்..

அம்மாவை பார்த்து இருக்கியா ? பத்திரகாளி போல டான்ஸ் போடுவா அந்த மூணு நாள் மட்டும், கொஞ்சம் எக்ஸ்ட்ரா எபக்ட்டோட ..

“இல்லப்பா , அது சாமி இல்ல, லாரன்ஸ் பட பேய் ..” லட்சுமிக்கு ஒரே ஹா ஹா ஹா வந்து விட்டது அம்மாவை பற்றி அப்பா நக்கல் அடித்தவுடன்

கொடுத்த கவுண்டமணி டைப் கவுன்டரில், கண்ணீரிலிருந்து அவனும் மகளுடன் “ஹா ஹா ஹா” மோட்க்கு சுவிட்ச் ஆனான் காவியன்.

Representational Image

“டயர்ட் , பிளட் லாஸ் ஏன் வருதுன்னா , ஹார்மோன் சேஞ்சு நடக்குது . கோவமும் அதனால தான்

நீ அதே மாதிரி ஆகிடாத. சொன்னாலும் நடக்க தான் போகுது.

நந்தினி 2.0 கமிங்..

ஆரம்பிக்கலாமுங்களா ..”

கமல் வாய்ஸ் மிமிக்ரி செய்த அப்பனை மிஸ் செய்தவாறே பெட்டில் புரண்டு புரண்டு சிரித்து உருண்டாள் லட்சுமி.

மனதில் அப்பா கூட இருந்தால் எப்படி இருக்கும், இந்நேரம் திருப்போரூர் நேர் ரோடு பீச்சில் அவர்களின் பேமிலி ஸ்பாடுக்கு கூட்டி கொண்டு போய் இருப்பார் என மன மணலில் கால் புதைத்தாள்.

பீச்சில் குளித்து விளையாண்டு பின் சாப்பிட ஷண்முகம் மெஸ்ஸில் பொடி தோசை பார்சல் ஆகி இருக்கும் ரெண்டு பேருக்கும். அம்மாவுக்கு மட்டும் கடையிலேயே நெய் ரோஸ்ட் போஜனம் ஆகி விடும், அந்த ஆள் அரவம் இல்லாத பீச் சுத்தமா பிடிக்காது நந்தினிக்கு


லட்சுமியின் கனவு சீட்டுகளை கலைத்த காவியன் “இப்ப அம்மா அப்பா எப்படி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நீ எங்களுக்கு கிப்ட்டா கிடைச்ச …?”


“ஆமாம்பா ..” நாணப்படுவது எப்படி என தெரியாத, போர்வையை போர்த்தி பெண்மையின் a , b , c படிக்கும் மகள், அப்பாவை கொஞ்சி பேசி பார்த்தவுடன் அம்மாவுக்கு பொறாமையாக இருந்தது. அவள் அப்பா ராஜா அய்யர் அவளிடம் ஒரு நாள் கூட இப்படி பேசியதே இல்லை, ஆனாலும் அவளுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது அப்பன்களை..

Representational Image

“அது போல, நீ படிச்சு முடிச்சு, ஏதாவது ஒன்னை வாழ்க்கையில ஸ்டார்ட் பன்னவுடன் , உனக்கு பிடிச்ச ஒரு பையன மீட் பண்ணுவ.

அவனுக்கும், உனக்கும் ஒரு குட்டி லட்சுமி பிறப்பாள் , அதுக்கு தான் இந்த சேஞ்சு எல்லாம்”, தயங்கி கொண்டே சொன்னான் காவியன்.


“போப்பா , நான் லவ் எல்லாம் பண்ண மாட்டேன் , நீயே உன்னை மாதிரி யாராவது செலக்ட் பண்ணி சொன்னா அவங்கள தான் மேரேஜ் பண்ணுவேன்”

ரூமை விட்டு நைசாக நழுவிய லட்சுமி , இப்போது சென்னை திருப்போரூர் வீட்டு பால்கனியில். அப்பனுடன் எதை வேண்டுமானால் பேச உரிமையுண்டு.

அந்தி மறைய தொடங்கி இருந்த சென்னையின் மாலையும் , இருட்டடித்த மேகாலயா மாலையும் தூரத்தில் கொட்டிய மேளத்தில் அதிர்ந்தது.

————

அந்த இரண்டு சந்தோச பால்கனிகளுக்கும் தெரியுமா என்ன…

அடுத்த நாள் மாலை எரக்சன் சைட்ல் நில சரிவு ஏற்பட்டு, காவியன் காவியம் முடிய போவது.


“சரி போடா , போய் ரெஸ்ட் எடு. இனி கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேப்டியா இரு. பெரிய பொண்ணு ஆகிட்ட, உன் லூசு அம்மாவை நீ தான் பார்த்துக்கனும் , குட் நைட் செல்லம்


அம்மாகிட்ட சொல்லிடு, நான் சீக்கிரம் கிளம்பனும் காலையில …

நாளைக்கு கடைசி நாள்” என்றது அந்த அப்பன் சாமி


-சுஜாதாப்பிரியன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-short-story-about-father-love

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக