Ad

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

Tamil News Today: ``ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் தடுப்பூசி!" - இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா, தடுப்பூசி நிலவரம்!

இந்தியாவில் இரண்டாம் கொரோனா அலையின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. அதனுடன் இந்தியாவில் தடுப்பூசி போடும் திட்டமும் மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது. நாடுமுழுவதும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களில் நிலவிய தடுப்பூசி தட்டுப்பாடு தற்போது குறைந்திருக்கிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் இந்தியாவில் ஒரு கோடி டோஸ் கையாளப்பட்டது இதுவே முதல்முறை. இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, ``ஒரே நாளில் 1 கோடியை தாண்டுவது ஒரு முக்கியமான சாதனை. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும், தடுப்பூசியை வெற்றிகரமாக நடத்துபவர்களுக்கும் பாராட்டுக்கள்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

பிரதமர் மோடி

இந்தியாவில், கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு குறைவதும் அதிகரிப்பதுமாக மாறி மாறி இருக்கிறது. கடந்த சில நாள்களாக பாதிப்பு குறைந்துவந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 46,759 -ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,26,49,947-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 509 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 4,37,370-ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 31,374 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவிலிருந்து இதுவரை 3,18,52,802 பேர் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,03,35,290 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 62,29,89,134 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-28-08-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக