Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

நாமக்கல்: `கணவர் கொடுமை தாங்க முடியலை சார்!' - ஆடு கட்டும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி

Also Read: பணம் கேட்டு தாயை நடுரோட்டில் அடித்த மகன்; தடுக்க ஓடோடி வந்த வளர்ப்பு நாய்!

அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்திய கணவனை, பெண் ஒருவர் ஆடு கட்டும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலை செய்யப்பட்ட ரகுபதி

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் வீராச்சாமி. இவரது மகன் ரகுபதி (வயது: 31). இவரது மனைவி அருணா (26) இந்த தம்பதிக்கு 6 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர். ரகுபதி, இரவு மனைவி, குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அருணா மறுநாள் காலை எழுந்து பார்த்த போது ரகுபதி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ரகுபதியின் மனைவி அருணா வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அருணா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ரகுபதியின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ரகுபதியின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரகுபதியின் கழுத்தில் காயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், சந்தேகமடைந்த வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய போலீஸார், அவரது மனைவி அருணாவிடம் விசாரனை நடத்தினர். இதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், தொடர்ந்து அருணாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அருணா

அதன்பிறகு, போலீஸாரின் விசாரணையில், `எனது கணவர் ரகுபதி அடிக்கடி மது அருந்திவிட்டு தன்னை அடித்து துன்புறுத்தி வந்ததார். எனக்கு பெற்றோர், உறவினர்கள் என்று யாரும் இல்லாததால், இதுகுறித்து ரகுபதியின் பெற்றோரிடம் தெரிவித்தும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதனால், எனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இந்த நிலையில், இரவு ரகுபதி தூங்கிக்கொண்டிருந்தபோது, ஆடு கட்டும் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். அவர் கொடுமை தாங்க முடியலை சார். அதனால்தான், இப்படி அவரை கொலை செய்தேன்' என்று அருணா கூறியதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி போலீசார் அருணாவை கைது மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மனைவி கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுவிக்கப்பட்ட தாய்!-பெற்ற குழந்தை கொலை வழக்கில் நடந்தது என்ன?



source https://www.vikatan.com/news/crime/namakkal-women-murdered-her-husband-because-of-torture

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக