Ad

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

திமுக கைக்கு சென்றதா வீடியோக்கள்?! - பாஜக-வுக்கு செக் வைக்கும் வியூகமா?

பாஜக நிர்வாகி குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், பாஜக-வுக்கு செக் வைக்கும் வேலையில் தமிழகத்தின் ஆளும் கட்சி இறங்கியிருப்பது தமிழக பாஜக-வுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக

தமிழக பாஜக நிர்வாகியாக இருந்த கே.டி.ராகவன் குறித்து சமூகவலைத்தளங்களில் சில தினங்களுக்கு முன்பாக வீடியோ ஒன்று வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பிறகு தமிழக பாஜக தலைமை இது குறித்து தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். வீடியோவை வெளியிட்ட மதன் பாஜக-விலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்.

Also Read: ராகவன் விவகாரம்: `அண்ணாமலையுடன் பேசியதாக சில ஆடியோக்கள்!’ - அடுத்த வீடியோ வெளியிட்ட மதன்

இந்நிலையில் தன்னை அண்ணாமலை நீக்கியது தவறு என்றும், அவரின் ஒப்புதல்படியே தான் வீடியோவை வெளியிட்டதாக மதன் ஆடியோ இணைப்புகளுடன் வீடியோ வெளியிட, அடுத்த பரபரப்பு பாஜக-வுக்குள் ஏற்பட்டது. இதுகுறித்த அண்ணாமலை தரப்பும் சில விளக்கங்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில் ராகவன் தவிர மேலும் சில பாஜக தலைவர்களுக்கு வீடியோ விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக மதன் கூறியிருப்பதால், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்துவருகிறார்கள்.

அண்ணாமலை

இந்தச் சூழ்நிலையில் பா.ஜ.க தரப்பின் மூவ்களை தொடர்ந்து கண்காணித்து வந்தது தமிழக உளவுத்துறை. அண்ணாமலைக்கும், மதனுக்கும் இடையே விரிசல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியும் இந்த விவகாரத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக பாஜக நிர்வாகிகள் குறித்த வீடியோக்கள் திமுக தலைமை கைக்கு சென்றுவிட்டதாக இன்று காலை முதல் திமுக தரப்பில் பேச்சு எழுந்துள்ளது. உளவுத்துறை மூலம் இந்த வீடியோக்களை கைப்பற்றியுள்ள தி.மு.க தலைமை அதை வைத்து எதிர்காலத்தில் பாஜகவுக்கு செக் வைக்க கூடும் என்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்

அதேசமயம் மதனுக்கு எதிராக பாஜக-வினர் தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்துவரும் நிலையில் திமுக-வின் இந்த மூவ் எதற்குப் பயன்படும் என்கிற கேள்வியும் பாஜக-வினர் மத்தியில் எழுந்துள்ளது.



source https://www.vikatan.com/news/politics/is-the-controversy-video-regarding-bjp-state-leaders-taken-by-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக