கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா? எத்தனை நாள்கள் கழித்துச் செய்யலாம்?
- தினேஷ்குமார் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.
``கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, எந்த பக்க விளைவுகளும் இல்லாத நிலையில் அடுத்த இரண்டு, மூன்று நாள்களுக்கு எந்தப் பயிற்சியையும் செய்யாமலிருப்பது சிறந்தது. ஒருவேளை தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் இருந்தால் அவை முற்றிலும் சரியாகும்வரை குறைந்த பட்சம் ஒரு வாரம் வரையிலாவது வொர்க் அவுட் செய்வதைத் தவிர்க்கலாம். தடுப்பூசியின் பக்க விளைவுகள் இருந்து அவற்றிலிருந்து குணமாகிக் கொண்டு வருபவர் என்றால் மிக மிக மைல்டான பயிற்சிகளிலிருந்து ஆரம்பிக்கலாம். எடுத்தவுடன் தீவிர பயிற்சிகளுக்குத் திரும்ப வேண்டாம்.
Also Read: Covid Questions: கோவிட்டிலிருந்து மீண்டு 2 மாதங்கள்; இன்னும் முதுகுவலி குறையவில்லை; என்ன செய்வது?
உதாரணத்துக்கு நடைப்பயிற்சி, குறைந்த எடை தூக்குவது போன்றவற்றைச் செய்யலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் உடற்பயிற்சியால் உங்கள் உடல் வறண்டு போகாமலும், தசைப்பிடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.
மிக முக்கியமாக உடல் சொல்வதைக் கேளுங்கள். தலைச்சுற்றுவது போலவோ, மயக்கம் வருவது போலவோ (தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலர் மயக்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள்) தோன்றினால் உடற்பயிற்சிகள் செய்வதை உடனே நிறுத்திவிட்டு ஓய்வெடுங்கள்.
Also Read: Covid Questions: கொரோனா குணமானது; ஆனால் தூக்கமின்மையால் அவதிப்படுகிறேன்; இதற்கு தீர்வுகள் உண்டா?
தடுப்பூசியால் பக்க விளைவு எதுவும் இல்லை என்றாலும் நான் அறிவுறுத்திய அந்த 2-3 நாள்கள் ஓய்வு மிக அவசியம். அதன் பிறகு மைல்டான பயிற்சிகளிலிருந்து தொடங்கி, உங்கள் வழக்கமான வொர்க் அவுட்டை செய்யலாம்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/when-can-i-start-my-regular-workout-after-taking-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக