இன்றைய பஞ்சாங்கம்
2. 7. 21 ஆனி 18 வெள்ளிக்கிழமை
திதி: அஷ்டமி இரவு 7.35 வரை பிறகு நவமி
நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 8.15 வரை பிறகு ரேவதி
யோகம்: சித்தயோகம் காலை 8.15 வரை பிறகு அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.15 வரை / பகல் 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம்: மகம் காலை 8.15 வரை பிறகு பூரம்
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
வழிபடவேண்டிய தெய்வம்: மீனாட்சி அம்மன்
பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி?
மனித வாழ்வும் பிரச்னைகளும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மனிதனாக அவதாரம் செய்தபோது அவருக்கு நேர்ந்த சகல பிரச்னைகளையும் அவர் மனித முயற்சியாலேயே வென்றார் என்கின்றன புராணங்கள். சிலர் பிரச்னைகளைக் கண்டு அஞ்சி முடங்கிவிடுகிறார்கள் சிலரோ அதை வாய்ப்பாக்கிக்கொண்டு வெற்றி கொள்ள முயல்கிறார்கள். பல பிரச்னைகள் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் நம் அதீத கற்பனைகளே. சில பிரச்னைகள் தற்காலிகமானவை.
இதைப் புரிந்துகொள்வதற்கு அனுபவமே உதவும். பிரச்னை இல்லாத பாதை என்பது முன்னேற்றம் இல்லாத பாதையாகவே இருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். ஏற்கெனவே யாரோ போட்டுவைத்த பாதையில் பயணம் செய்வது மிக எளிது. ஆனால், தானே முயன்று தன் பாதையே வகுத்துக்கொள்ளும் ஒருவர் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது குறித்து விரிவாக அறிந்துகொள்ள மேலே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
source https://www.vikatan.com/spiritual/gods/how-to-manage-problems
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக