அரசியல்மீது ஆர்வம், சமூகத்தின்மீது அக்கறை, இலக்கியங்கள்மீது ஈர்ப்பு என இன்றைய தமிழ்ச் சூழல் நெகிழவைப்பதாகவே இருக்கிறது. மேடைகள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று பலதரப்பட்ட வகைகளிலும் நம் பேச்சுத்திறமையின் மூலமாகச் சாதிப்பதற்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
நாமும் பேச்சாற்றல்மிக்கவராக விளங்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தைப் பலரிடம் பார்க்க முடிகிறது. ஆகவேதான், இளைய சமூகத்தினர், மாணவர்கள், மாணவிகள் தங்கள் பேச்சாற்றலை வளர்த்தெடுத்துக்கொள்வதற்கான சிறந்த ஒரு களத்தை ‘ஜூனியர் விகடன்’ ஏற்படுத்திக்கொடுக்கிறது.
இந்த அரிய வாய்ப்பை காணொலிப் பயிலரங்கம் வாயிலாக தொடர்ந்து வழங்கிவருகிறோம். அரசியல், சமூகம், இலக்கியம், ஆன்மிகம், நகைச்சுவை என்று பல்வேறு வகைகளிலும் உங்களைப் பட்டை தீட்டிக்கொள்ள... இந்தப் பயிலரங்கம் ஒரு நல்ல வாய்ப்பு.
தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களான நாஞ்சில் சம்பத், பட்டிமன்ற ராஜா, பாரதி பாஸ்கர், பர்வீன் சுல்தானா ஆகியோர் ஜூனியர் விகடனின் ‘தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசு... உண்மையே பேசு’ என்கிற தலைப்பிலான இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சியை வழங்கியிருக்கிறார்கள். அதன் மூலம் ஏராளமானோர் பயன்பெற்றிருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக, 03.07.2021 (சனிக்கிழமை) மாலை 6 - 7 மணியளவில் நடைபெறும் ‘தமிழ் மண்ணே வணக்கம்!’ நிகழ்ச்சியில் தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவரும், முற்போக்கு சிந்தனையாளரும், மூத்த பத்திரிகையாளருமான மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்று பேச்சுப் பயிற்சியை அளிக்கவிருக்கிறார்.
பட்டிமன்ற மேடைகளில் நகைச்சுவை ததும்பும் பேச்சுகளால் தமிழ் மக்களிடையே பிரபலமாக விளங்கும் மதுக்கூர் ராமலிங்கம், ஆற்றல்மிகு எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும் ஆவார். அவரிடம் நேரடியாகப் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கி முன்பதிவு செய்துகொள்ளுங்கள். இது ஒரு கட்டணமில்லா வெபினார்!
source https://www.vikatan.com/news/literature/ramalingam-in-online-event-on-public-speaking
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக