உடல் நலக்குறைவால் மரணமடைந்த தேமுதிக நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக நேற்று மதுரை வந்திருந்தார் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் "பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், மின் கட்டணம் உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு போன்றவற்றாலும் விலைவாசி உயர்வாலும் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனை கண்டித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி வருகின்ற 5-ம் தேதி தமிழகம் முழுவதும் தேமுதிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தேமுதிகவை பொறுத்தவரையில் வெற்றியைக் கண்டு ஆணவப்படுவதோ , தோல்வியை கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல. வலுவான கட்டமைப்புகளை உள்ளடக்கிய கட்சி.
மேலும் தேமுதிகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்." எங்கள் திருமணம் கலைஞர் தலைமையில் நடைபெற்றது இந்த உலகத்துக்கே தெரியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனான நட்புறவு என்றைக்குமே இருக்கும்.
"சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசுவது அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம். அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது." என்றவரிடம்
'உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு' பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.தேதி அறிவித்த பின்பு ஆலோசனை கூட்டம் நடத்தி தேமுதிக கட்சியின் நிலைபாட்டை தலைமை அறிவிக்கும்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/premalatha-vijayakant-met-press-people-at-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக