ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
Also Read: திருச்சி: ஏர்போர்ட்டை நோட்டமிடும்`மீன்கள்'; தங்கம் கடத்தும் 'குருவிகள்'; நடப்பது என்ன?!
அப்போது ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், தீன் இப்ராஹிம்ஷா ஆகிய ஆறு பேரிடம் இருந்து 7 கிலோ 908 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி ஆடைகளில் மறைத்து கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைபற்றபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. சமீபகாலமாக கோவை விமான நிலையத்தில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
இவர்கள் ஆறு பேரும் கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், வேலூர், திட்டக்குடி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், “பேஸ்ட் வடிவிலான தங்கதைப் பொறுத்தவரை, கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே கடத்தி வருபவர்களை பிடிக்க முடியும். வழக்கமான சோதனைகளில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை பிடிக்க முடியாது.
இவர்கள் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்வர்கள் என்பதால், இவர்களை ஓரே நபர் அனுப்பினாரா, அல்லது வேறு வேறு நபர்கள் அனுப்பி இருக்கின்றனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/gold-smuggling-in-paste-form-in-coimbatore-airport-caught
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக