காஷ்மீர் தலைவர்களுடன் இன்றுபிரதமர் முக்கிய ஆலோசனை!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 -ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததுடன் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது இந்நிலையில், காஷ்மீரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. குறிப்பாக காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள், பிரதமரிடம் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/24-06-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக