Ad

புதன், 23 ஜூன், 2021

கோவை: வலி நிவாரண மாத்திரையில் போதை ஊசி! - இளைஞர்கள் கைது

கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக மருந்து மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தும் கலாசாரம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக உள்ளது.

போதை மருந்து

Also Read: சென்னை: பெட்ரோல் விலை உயர்வு; லிஃப்ட் கொடுத்ததற்கு பணம்! -போதை மாணவனால் மேஸ்திரிக்கு நேர்ந்த கொடூரம்

முக்கியமாக டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதனால், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

இந்நிலையில், தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகிக்கும் வகையில் சாலையோரமாக நின்ற ஓர் காரில் சோதனை செய்தனர். அந்த காரில் வலி நிவாரணத்துக்காக உட்கொள்ளக் கூடிய மாத்திரைகள் அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விற்பனைக்கு வைத்திருந்த வலி நிவாரண மாத்திரைகள்

ஆனால், அதற்கான மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த குறிப்பிட்ட வலி நிவாரண மாத்திரையை ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தினால் போதை கிடைக்கும் என்று கூறியுள்ளனர். ஜானகி ராமன், பார்த்திபன், கபிலேஷ், முகமது அப்சல் ஆகிய நான்கு பேர் இந்த மாத்திரையை போதை பயன்பாட்டுக்கு விற்றது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள்

அவர்களிடமிருந்து 650 மாத்திரைகள், ரூ.11,500 ரொக்கம் மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மாத்திரையை சட்டவிரோதமாக விற்ற நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/coimbatore-youths-arrested-for-illegal-drugs-sale

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக