என் வயது 39. கடந்த 5 வருடங்களாக நீரிழிவுக்கு மருந்துகள் எடுத்து வருகிறேன். 2021, ஜூலை மாதம் சுகர் டெஸ்ட் செய்தபோது ரத்தச் சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 255-ம், சாப்பிட்ட பிறகு 399-ம் இருந்தது. அதையடுத்து மருத்துவர் என்னை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளச் சொன்னார். இந்நிலையில் நான் கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
- ரமேஷ் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.
``நீரிழிவுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாகவும், இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த இரண்டையும் செய்தும் ரத்தச் சர்க்கரையின் அளவு இவ்வளவு இருப்பது மிகவும் தவறு. ஒருவருக்கு இந்த அளவுக்கு ரத்தச் சர்க்கரை அதிகரிக்கும்போதுதான் மருத்துவர்கள் மாத்திரைகளையும இன்சுலினையும் சேர்த்துப் பரிந்துரைப்போம்.
மாத்திரை மற்றும் இன்சுலின் காம்பினேஷனுக்குப் பிறகும் ரத்தச் சர்க்கரை அளவு குறையாவிட்டால், முதல் வேலையாக நீங்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது மிக முக்கியம். ஆனால், இந்த நிலையில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்ற சந்தேகமே தேவையில்லை. தாராளமாகப் போட்டுக்கொள்ளலாம். கோவிட் தொற்று வராமலிருக்க நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா?
அதே நேரம் ரத்தச் சர்க்கரையின் அளவால் உங்களுக்கு உடலின் பிற உறுப்புகள் பாதிக்கப்படாமலிருக்க நீங்கள் உடனடியாக ரத்தச் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த வேண்டும். கோவிட் தொற்று வராமலிருக்க தடுப்பூசி எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பால் வேறு பிரச்னைகள் வராமல் தடுப்பது. எனவே, நீங்கள் நீரிழிவு நோய் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை உடனே தொடங்க வேண்டியது அவசியம்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
source https://www.vikatan.com/health/healthy/can-people-who-take-insulin-take-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக