டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வருடா வருடம் லட்சக் கணக்கானோர் பங்குபெற்றாலும், பலருக்கும் முறையான வழிகாட்டல் கிடைப்பதில்லை. அதனை மனதில் கொண்டே தொடர்ந்து டி,என்.பி.எஸ்.சி தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சிகளை ஆனந்த விகடன் தொடர்ந்து நடத்தி வருகிறது. மீண்டும் அப்படி ஓர் இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தவிருக்கிறது ஆனந்த விகடன்.
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
இதற்கு முன்னர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதியவர்கள், இனி எழுதவிருப்பவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். ஜூலை 24 மற்றும் ஜூலை 25 ஆகிய இரண்டு தேதிகளில், காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது முதல் வெற்றிகரமாக எப்படித் தேர்வை எதிர்கொள்வது என்பதுவரை பல நுணுக்கமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள் துறை நிபுணர்கள். இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், சமீபத்தில் Group-I தேர்வில் வெற்றி பெற்ற ஐந்து வெற்றியாளர்கள் மற்றும் மூன்று நிபுணர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
முழுவதுமாக இணைய வழியில் Zoom செயலியில் நடக்கும் இந்த TNPSC வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும். முன்பதிவு செய்யவும், இந்த வழிகாட்டல் நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல்களை அறிந்து கொள்ளவும் இங்கே கிளிக் செய்யவும்.
முன்பதிவிற்குக் கீழே இருக்கும் எண்களையும் அழைக்கலாம்: 9626364444 | 9626369899 | 9790990404
source https://www.vikatan.com/events/announcements/ananda-vikatan-online-seminar-for-tnpsc-aspirants-how-to-apply
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக