Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

திண்டுக்கல்: ஓடை அருகே கிடந்த 14 நாட்டுத் துப்பாக்கிகள்! - அதிர்ச்சியில் காவல்துறை

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அருகே உள்ளது சாணார்பட்டி கிராமம். அங்கு வசிக்கும் பரதன் என்பவர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணையில் இறங்கிய போலீசார், நாட்டுத்துப்பாக்கியை கைப்பற்றி, பரதனை கைது செய்தனர். மேலும், அவர் முறையாக உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கிகள்.

Also Read: திண்டுக்கல்: `திடீர் ரெய்டு; பறிபோன பணம், சொத்து ஆவணங்கள்!’ - சிக்கிய போலி அரசு அதிகாரிகள்

இந்நிலையில், சாணார்ப்பட்டிப் பகுதியில் சிலர் நாட்டுத்துப்பாக்கிகள் பயன்படுத்திவருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து, வருவாய்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில், சாணார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கொடைக்கானல் மலை

Also Read: திண்டுக்கல்: கழுத்தில் கத்தி... தற்கொலைக்கு முயன்றவரை தடுக்கச் சென்ற பெண் காவலர் காயம்!

இந்நிலையில் நேற்று (17.09.2020), திண்டுக்கல் ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி வினோத் தலைமையிலான குழுவினர், சாணார்பட்டி, சிறுமலை, தவசிமடை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, தவசிமலை கிராமம், கருந்தண்ணி ஓடை அருகே நாட்டுத் துப்பாக்கிகள் கிடப்பதாக தகவல் கிடைக்க, சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக 14 நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பார் இல்லாமல் கிடந்தது. தவசிமடை கிராம நிர்வாக அலுவலகரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகிறார்கள்.

கொடைக்கானல்

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., ரவளி ப்ரியா கூறும் போது, ``திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சின்னமலையூர், பெரியமலையூர், கரந்தமலை, கொடைக்கானல் அருகே உள்ள மண்ணவனூர், பூண்டி, கூக்கால், தாண்டிக்குடி, இதே போல, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பாச்சலூர் ஆகிய பகுதிகளில் சிலர் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை தொடரும். யார் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Also Read: `ரூ.260 வரை 600 வரை.. வகுப்புவாரியாக வசூலித்த அரசுப் பள்ளி!’ - திண்டுக்கல் சர்ச்சை



source https://www.vikatan.com/news/crime/police-were-shocked-to-find-14-country-guns-lying-unattended-in-dindugul

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக