Ad

திங்கள், 13 ஜூலை, 2020

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை... ரிசல்ட் நெகட்டிவ்’ - தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாலும், முதல்வருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,32,35,751 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,75,525 ஆகவும், கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 76,96,381 ஆகவும் உள்ளது.

Corona

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 34,79,483 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,38,247 ஆக அதிகரித்துள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/1472020-corona-virus-live-news-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக