Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

சாத்தான்குளம்: `நள்ளிரவில் முத்துராஜுடன் தூத்துக்குடி பறந்த சி.பி.ஐ’ -சூடுபிடிக்கும் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன், போலீஸாரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரித்து வருகிறது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட விசாரணைக்குழு கடந்த நான்கு நாள்களாக விசாரித்து வந்த நிலையில், நேற்று மாலை, வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகன் ஆகிய ஐந்து பேரை விசாரணைக்காக மூன்று நாள்கள் காவலில் எடுத்தது சி.பி.ஐ.

காவலர் முத்துராஜ்

தொடர்ந்து ஐந்து பேரும், மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாலை முதல் நள்ளிரவு வரை ஒவ்வொருவரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

Also Read: சாத்தான்குளம்: மதுரை வந்த சி.பி.ஐ குழு - தூத்துக்குடியில் இன்று மாலை விசாரணை!

இந்நிலையில், நள்ளிரவில், திடீரென காவலர் முத்துராஜை அழைத்துக்கொண்டு சி.பி.ஐ அதிகாரிகள், தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றுள்ளனர். அங்கே, சாத்தான்குளம் காவல்நிலையம், பென்னிக்ஸ் மொபைல் கடை ஆகிய இடங்களில் முத்துராஜுடன் விசாரணை நடந்துள்ளது. சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த விசாரணைக்குப் பின்னர், முத்துராஜுடன் மீண்டும், மதுரை சி.பி.ஐ அலுவலகத்துக்குத் திரும்பியுள்ளனர்.

Also Read: சாத்தான்குளம் இரட்டைக்கொலை - “சி.பி.ஐ விசாரணையில் விரைவில் நியாயம் கிடைக்கும்!”

நள்ளிரவில், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு திடீர் பயணம் செய்த சி.பி.ஐ அதிகாரிகளால், வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என்றே பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/cbi-officers-travel-from-madurai-to-thoothukudi-at-midnight

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக