Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

``வனிதாக்காவுக்காக நான் பேசினேன்... ஆனா, அந்த சூர்யாதேவி?!'' - நாஞ்சில் விஜயன்

``சூர்யாதேவிங்கிற பெண் தொடர்ந்து என்னைப் பத்தி அவதூறா பேசிட்டு வர்ற பின்னணியில `கலக்கப் போவது யாரு’, `அது இது எது’ புகழ் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பிருக்கு. அவங்க ரெண்டு பேரும் திட்டமிட்டே என்னை அசிங்கப்படுத்திட்டிருக்காங்க. நாஞ்சில் விஜயனுக்கு சூர்யாதேவிகூட ரொம்ப வருஷமாப் பழக்கமிருக்கு’’என நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இப்படியொரு குற்றச்சாட்டை வைத்திருந்தார் வனிதா விஜயகுமார். வனிதாவின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து நாஞ்சில் விஜயனிடம் பேசினேன்.

``சூர்யாதேவிங்கிறவங்க நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சினிமா, டிவியில நடிக்க சான்ஸ் கேட்டு பல இடங்களுக்கும் அலைஞ்சிட்டிருந்தவங்க. நான் என்னுடைய காமெடி ஷோக்கள்லயும், என்னுடைய தொடர்புகளை வச்சு மத்த சில ஷோக்கள்லயும் சின்னச் சின்னக் கேரக்டர்கள் இருந்தா அவங்களுக்குச் சொல்லுவேன். நாங்க ரெண்டு பேரும் அறிமுகமானது இப்படித்தான்.

நடிகை வனிதா

ஆனா, போகப்போக அவங்களோட சில குணங்கள், நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காததால அவங்களை அவாய்ட் பண்ணத் தொடங்கி, ஒருகட்டத்துல அவங்களோட பேசறதை முழுசா நிறுத்திட்டு நம்பரையே பிளாக் பண்ணிட்டேன். சத்தமாப் பேசறது, சரளமா கெட்டவார்த்தை பேசறது மாதிரியான விஷயங்கள்தான் அவங்ககிட்ட எனக்குப் பிடிக்கலை.

இப்படி தொடர்பே இல்லாது போனபிறகு, வனிதாக்கா - பீட்டர் பால் கல்யாணம் பத்தி அவங்ககிட்ட நான் என்னுடைய யூ-ட்யூப் சேனலுக்காக மறுபடி சந்திச்சுப் பேசினதுதான் நான் செஞ்ச ஒரே தப்பு. ஏற்கெனவே அந்தக் கல்யாணம் பத்தி அவங்க பேசி வீடியோ வெளியிட்டிருந்ததை வச்சே அவங்ககிட்ட நானும் ரொம்ப நாள் கழிச்சுப் பேசினேன். அப்பக்கூட நான் வனிதாக்கா பத்தி தப்பா எதுவும் பேசலை’’ என்றவரிடம், சூர்யாதேவியை `கஞ்சா வியாபாரி’ என வனிதா தரப்பு குறிப்பிட்டது குறித்தும் கேட்டேன்.

``இந்தக் கேள்விக்கு சூர்யாதேவிதான் பதில் சொல்லணும். எனக்கு எதுவும் தெரியாது. தன்னைப் பத்தி அசிங்கமாப் பேசற சூர்யா மேல நடவடிக்கை எடுக்கணும்னா போலீஸ்ல அவங்க பேசி வெளியிட்ட வீடியோ ஆதாரத்தைக் காட்டினாலே போதும். அதை விட்டுட்டு, அவங்களோட டிக் டாக் பண்ணினவங்க, அவங்க கூட செல்ஃபிக்கு நின்னவங்களையெல்லாமா சேர்த்துக் கோத்து விடுவது? திறமையான வக்கீல் நிச்சயம் இந்த மாதிரியெல்லாம் செய்ய மாட்டாங்க’’ என்ற விஜயன், வனிதாக்கா பிரஸ் மீட் பார்த்துட்டு சூர்யா தேவியும் எனக்கு ஃபோன் பண்ணாங்க. கெட்ட வார்த்தை பேசில்லாம் வீடியோ போடறது பிரச்னையில முடியும்னு ஏற்கெனவே நான் எச்சரிச்சிருந்தேன். ஆனா அதை அவங்க கேட்கலை. அதனால `அம்மா தாயே இப்படி எதுலயாவது என்னை மாட்டி விட்டுடுவன்னுதானே உன் சகவாசமே வேண்டாம்னு இருந்தேன். இப்ப நடந்திடுச்சுல்ல’னு சொல்லி போனைக் கட் பண்ணிட்டேன்’’ என்றார்.

சூர்யா தேவி

``சூர்யாதேவிக்கும் உங்களுக்கும் தவறான தொடர்பு’னு சொன்னதற்கு, வனிதா தரப்பு மீது உங்க பதில் நடவடிக்கை?” என்று கேட்டதற்கு, ``என்ன பண்றதுன்னு இன்னும் யோசிக்கலை. இவங்க சண்டையில தேவையில்லாம என் பெயர் அடிபடுது. வனிதாக்கா, சூர்யாதேவி ரெண்டு பேருமே மனசளவுல பாதிக்கப்பட்டிருக்காங்களோன்னு தோணுது. ரெண்டு பேருக்குமே கவுன்சிலிங் தந்தாத் தேவலை. என் மனசுல எந்த கள்ளத்தனமும் இல்லை. அதனால கூலாவே இருக்கேன்'' என்றார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/nanjil-vijayan-answers-to-vanithas-allegations-against-him

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக