Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

சாத்தான்குளம்: `5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல்!’ - நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

சாத்தான்குளம்: சிபிஐ கோரிக்கை!

சாத்தான்குளம் காவல் நிலையம்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியுள்ளது. சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் தற்போது விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் கைதான 5 போலீஸார் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணையின் போது சிபிஐ விசாரணைக்கு செல்ல போலீஸார் ஐவரும் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் சிபிஐ கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், 5 காவலர்களையும் 3 நாள் சிபிஐ விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/14-07-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக