Ad

வியாழன், 1 ஜூலை, 2021

Tamil News Today: இந்தியாவில் 4 லட்சத்தைக் கடந்த மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! -மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 46,617 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,04,58,251 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 853. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,00,312 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மரணங்கள்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,95,48,302 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 5,09,637 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 59,384 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 34,00,76,232 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன!

தளர்வுகளுடன் ஊரடங்கு?! - இன்று ஆலோசனை 

முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பிறகு குறைய தொடங்கியது. தற்போதைய ஊரடங்கு ஜூலை மாதம் 5 -ம் தேதி காலைவரை அமலில் இருக்கும். இந்த நிலையில். தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

சென்னையிலும் 100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை!

பெட்ரோல் விலை

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்கள் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்த நிலையில், இன்று தலைநகர் சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.13 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்?

மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின்னர், அமைச்சரவையில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் இருக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் 81 அமைச்சர்கள் வரை இடம் பெற முடியும் என்பதால், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். மேலும் விரைவில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அமைச்சரவையில் அதிக இடம் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-02-07-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக