நான் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, எனக்கு கொரானா தொற்று வந்தது. மீண்டும் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துவிட்டது. இனி இரண்டாவது தவணை தடுப்பூசி எத்தனை நாள்கள் கழித்துப் போட்டுக்கொள்ள வேண்டும்? கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?
- சுசீந்திரன்.பா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.
``தடுப்பூசி என்பது தொற்றே வராமல் உங்களை 100 சதவிகிதம் காக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. இது கோவிட் நோய்க்கெதிரான தடுப்பூசிக்கு மட்டுமல்ல, தட்டம்மை, இன்ஃப்ளுயென்ஸா உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் பொதுவானது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்படும் தொற்றானது `பிரேக்த்ரூ இன்ஃபெக்ஷன்' எனப்படுகிறது. அப்படி ஏற்படும் தொற்று தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட இன்னொரு காரணம், வைரஸ்களில் ஏற்படும் உருமாற்றம். வைரஸின் இந்த உருமாற்ற வளர்ச்சியால் தடுப்பூசியின் செயல்திறன் கேள்விக்குள்ளாகிறது.
Also Read: Covid Questions: முதல் தடுப்பூசி போட்ட 4 நாள்களில் பாசிட்டிவ்; இப்போது 2-ம் தடுப்பூசி போடலாமா?
தொற்று வந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என்கிற மாதிரியான செய்திகள் உலவுகின்றன. அவற்றைப் பொருட்படுத்த வேண்டாம். தொற்றுக்குள்ளானவர்களும் நிச்சயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் விஷயத்தில் நீங்கள் தொற்றிலிருந்து குணமான 3 மாதங்களுக்குப் பிறகு, அடுத்த டோஸ் போட்டுக்கொள்ளலாம்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/why-people-turn-positive-to-covid-even-after-taking-vaccines
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக