கடந்த பல மாதங்களாக வங்கி சம்பந்தமான பல மோசடிகள் மிகவும் நுணுக்கமாக நடந்து வருகின்றன. அதில் முக்கியமாக எனக்கு நடந்த மோசடியை இங்கே கூறிப்பிட விரும்புகிறேன்.
என்னுடைய 7 மாத வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு சில நாள்கள் முன்னரே இந்தியா திரும்பியிருந்தேன். கடந்த 08.07.2021 அன்று காலை எனக்கு ஒரு புது நம்பரில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதில் ஸ்டேட் பேங்கின் கேஒய்சி அப்டேட் இல்லாத காரணத்தால் உங்களுடைய கணக்கு துண்டிக்கப்படும் என்றும், அத்துடன் அதில் ஒரு லிங்க்கும் இணைக்கப்பட்டிருந்தது.
நான் எனது அவசர செயல்களின் காரணமாக, எதையும் யோசிக்காமல் அந்த லிங்க்-ஐ பின்தொடர்ந்தேன். அதற்குப் பிறகு, அது எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் பக்கம் போன்ற அச்சு அசலான பக்கத்துக்குள் எடுத்துச் சென்றது. அதில் எனது ஆன்லைன் தரவுகளைப் பதிவிட்டு உள்ளே சென்றவுடன் எனது ஓ.டி.பி-ஐ பதிவிடுமாறு கேட்டது. ஓடிபியை பதிவிட்டவுடன் அதற்குப் பிறகு, கணக்கு வைத்திருப்பவரின் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி போன்ற சில ரகசிய தகவல்களை மீண்டும் உள்ளிடுமாறு கேட்டது. கேட்கப்பட்ட தகவல்களை உள்ளிட்ட பிறகும் கூட, அது பயனரை மற்றுமோறு ஓ.டி.பி பக்கத்துக்கு திருப்பிவிடுகிறது. ஆனால், நான் முதல்முறை ஓ.டி.பி மற்றும் தகவல்களை உள்ளிட்ட பின்பு அந்த வலைதளப்பக்கம் செயல்படவில்லை. அதனால், அதிலிருந்து வெளியேறிவிட்டேன்.
சில மணிநேரம் கழித்து எனது கைப்பேசி மற்றும் இ-மெயிலில் தங்களது பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. அதற்குப் பிறகு, உடனே நான் என்னுடைய டெபிட் காட்ர்டை பிளாக் செய்ய வாடிக்கையாளர் எண்ணை (1800 11 2211) தொடர்புகொண்டும் மற்றும் உடனடியாக வங்கியின் கிளையை அணுகியும் நடந்தவற்றைச் சொன்னேன். அவர்கள் மூலமாக இன்டர்நெட் பேங்கிங் வசதியை செயல் இழக்க வைத்தேன்.
அத்துடன் எஸ்.பி.ஐ-யின் வாடிக்கையாளர் இமெயில் வசதியின் மூலமாக நடந்தவற்றைப் பதிவு செய்தேன். (report.phishing@sbi.co.in, unauthorisedtransaction@sbi.co.in) மற்றும் http://cmcell.tn.gov.in வலைதளத்திலும் நடந்தவற்றைப் பதிவு செய்தேன்.
Also Read: சென்னை: ரூ. 1 லட்சம் முதலீடு; ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,000! - எஸ்.எம்.எஸ்-ஆல் ஏமாந்த பெண் இன்ஜினீயர்
அதன் பிறகு https://cybercrime.gov.in வலைதளத்தில் எனக்கு நடந்த இச்செயலைப் பற்றி புகார் அளித்தேன். புகார் அளித்த மறுதினம் விசாரணைக்காக மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்துக்கு என்னை அழைத்தனர். இவ்விசாரணையிலிருந்து எனக்கு புலப்பட்டது என்னவென்றால், விட்ட பணம் திரும்ப கிடைக்காது.
புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதை ஒரு மனுவின் மூலமாக பெற்றுக் கொண்டனர். ஒருவேளை விசாரணையில் முன்னேற்றம் நடந்தால் அதைப் பற்றி புகார் அளித்த பதிவுகளில் அறிந்துகொள்ளலாம் என்றும் இது போன்ற சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட செயல்களை 155260 இலவச எண்ணுக்கு உங்களின் புகார்களைப் பதிவு செய்லாம்; புகாரின் நிலையை அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
எஸ்.பி.ஐ-யின் வாடிக்கையாளர் சேவை மையமும், ``நீங்கள் இழந்த பணத்துக்கு வங்கி பொறுப்பாகாது" என்று அறிவுரைகளை வழங்கி விடை பெற்றுக்கொண்டனர்.
இதனால், இது போன்ற உறுதியற்ற குறுஞ்செய்திகளைக் கண்டு அதைப் பின் தொடர்வதையும், அதில் உங்களுடைய முக்கிய தகவல்களைத் கொடுப்பதையும் தயவு செய்து தவிர்க்கவும்.
இது போன்ற ஏமாற்று வேலைகளில் இருந்து யாரும் சிக்காமல் இருக்க கீழ்க்கண்டவற்றை செய்தால் தப்பிக்கலாம் என்றனர்.
1. முதலில் எந்தொரு வங்கியும் தங்களது வாடிக்கையாளர்களை கேஒய்சி அல்லது உங்களது வங்கி தொடர்பான தகவல்களை தொலைபேசி வாயிலாக அல்லது குறுஞ்செய்தி மூலமாக கேட்க மாட்டார்கள்.
2 . எந்தவொரு வலைதளத்தையும் பயன்படுத்தும் முன் https:// என்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
3. இழந்த உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவது என்பது மிகவும் கடினமான செயல்.
4. யாராவது உங்களைத் தொடர்புகொண்டு உங்களின் வங்கிக் கணக்கு விவரம் அல்லது ஓ.டி.பி கேட்டால் கண்டிப்பாக பகிர வேண்டாம்.
Also Read: மும்பை: ரூ.350-க்கு உணவு ஆர்டர் செய்து ரூ.75,000 இழந்த நபர்! - ஒ.டி.பி இல்லாமலே ஆன்லைன் மோசடி
5. உங்களின் இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றவும்.
6. ஒரே பாஸ்வேர்டுகளை மற்ற சில வலைதளங்களுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
7. இது போன்ற சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட செயல்களை 155260 இலவச எண்ணில் உடனடியாகப் புகார் அளிக்கவும்.
- சா.ஶ்ரீதர்
source https://www.vikatan.com/business/banking/sbi-customer-shares-how-he-lost-money-due-to-phishing-attack
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக