Ad

வியாழன், 22 ஜூலை, 2021

நீலகிரி: கொட்டித் தீர்க்கும் மழை; சாலையில் விழும் மரங்கள்! - வெள்ளக்காடாகும் விளை நிலங்கள்

நீலகிரியில் வழக்கமாக துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை மிகவும் தாமதமாகவே துவங்கியது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக கடந்த 10 நாள்களுக்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மரங்கள் விழுந்து மின் விநியோகமும் தடைபட்டுள்ளது.

சாலையில் விழும் மரங்கள்

ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற பகுதிகளில் மழை தீவிரமடைந்து கன மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. ஊட்டி - கூடலூர் சாலை பைக்காரா பகுதியில் மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

Also Read: சீனா: 'ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத பெரு மழை! வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்!'

ஊட்டி- எமரால்டு சாலை முத்தோரை பகுதியில் ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்ததில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. இவற்றை சீரமைக்கும் பானையில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் மழையால் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பல ஏக்கர் பரப்பளவிலான மலை காய்கறி, பயிர்கள் நீரில் மூழ்கி வருகின்றன. மழை நீடித்தால் மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

மழை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம், "மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். 24 மணி நேரமும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/nilgiri-rain-and-flood-agriculture-affected-heavily

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக