மேற்கு வங்க சட்டமன்ற கூட்டம் மார்ச் 7-ம் தேதி அதிகாலை 2 மணிக்குக் கூடும் என மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``வரலாற்றில் முதன் முறையாக அதிகாலை 2 மணிக்கு மேற்கு வங்க சட்டப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இது வழக்கத்துக்கு மாறாது என்றாலும், மாநில அமைச்சரவையின் முடிவு" எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான தகவலில், மாநில சட்டமன்ற கூட்டத்துக்கான அழைப்பில் பிற்பகல் 2 மணி என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பி.எம்(PM) என்ற குறியீடு தட்டச்சு பிழையால் ஏ.எம்(am) என மாறியுள்ளது. இது தொடர்பாக மாநில அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கே கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தலைவர் பிமன் பானர்ஜி, ``இது சாதாரண தட்டச்சுப் பிழை. மாநில அரசின் ஒப்புதலுடன் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என விளக்கமளித்துள்ளார்.
source https://www.vikatan.com/news/politics/the-legislature-will-meet-at-2-am-this-is-first-time-in-indian-history
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக