Ad

புதன், 21 ஜூலை, 2021

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, சொந்தமான மற்ற இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. அவரின் சென்னை வீடு, கருரில் உள்ள வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆட்சியின் எம்.ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து கழகங்களில் ஊழல் நடந்ததாக புகார் வந்ததையொட்டி இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

Also Read: `ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்; நிரூபிக்க முடியுமா ஸ்டாலினால்?’ - எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி

சென்னையில் ஒரு இடத்திலும், கரூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும் இந்த ரெய்டு நடந்துவருகிறது. கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியை எதிர்த்துப் போட்டியிட்டு எம்.ஆர் விஜயபாஸ்கர் தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி ரெய்டு காரணமாக எம்.ஆர் விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் அதிரடி ரெய்டு காரணமாக, தமிழக அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/former-minsitermr-vijayabhaskar-house-properties-raid-by-anti-corruption-department

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக