Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

மீண்டும் மிட்ரேஞ்ச் ஏரியாவில் ஒன்ப்ளஸ்... ஒன்ப்ளஸ் நார்டில் என்ன எதிர்பார்க்கலாம்? #Expectations

தொடர்ந்து பல விதங்களிலும் மாறிவரும் சந்தையாக இருக்கிறது இந்திய ஸ்மார்ட்போன் சந்தை. வந்த இரண்டே வருடங்களில் கணிசமான வாடிக்கையாளர்களை பெறும் நிறுவனங்களைப் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் ராஜாவாக இருந்த நிறுவனங்கள் இன்று இருந்த தடம் தெரியாமல் காணாமல் போய்விட்டதையும் பார்க்கிறோம். `மாற்றம் ஒன்றுதான் மாறாதது' என்பது டெம்ப்ளேட் வசனம்தான். ஆனால், போட்டி மிகுந்த இந்தச் சந்தையில் நிலைத்து நிற்க, இதை ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். இப்படியான சந்தையில் ஐந்து வருடங்களாக படிப்படியாக வளர்ச்சி கண்டுவரும் நிறுவனம் ஒன்ப்ளஸ். விலையுயர்ந்த ஃபிளாக்ஷிப் போன்களுக்கு மாற்றாகக் கிட்டத்தட்ட அந்தப் போன்களிலிருக்கும் அனைத்து அம்சங்களையும் குறைந்த விலையில் கொடுத்து மக்களை ஈர்த்த ஒன்ப்ளஸ் இன்று அந்த நிறுவனங்களைவிடவும் விலையுயர்ந்த போன்களை விற்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

OnePlus

இப்போது 40,000 - 60,000 ரூபாய் ரேஞ்சில் இந்தியாவில் பெரும்பாலானவர்கள் டிக் அடிக்கும் பிராண்ட் ஒன்ப்ளஸ்தான். ஆனால், காலப்போக்கில் ஒன்ப்ளஸ் போன்களின் விலை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஏறிப்போய்விட்டது எனப் ஒன்ப்ளஸ் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவிப்பதைப் பார்க்க முடிந்தது. இதற்குத் தீர்வாக ஒரு மிட்ரேஞ்ச் போன் விரைவில் ஒன்ப்ளஸிலிருந்து வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகின. இந்தச் செய்தி வரத் தொடங்கியதிலிருந்தே பலரும் இந்தப் போனுக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தார்கள். `பழசை என்றும் மறக்க மாட்டோம்' என இறுதியாக இந்தப் போனை அடுத்த வாரம் (ஜூலை 21) அறிமுகப்படுத்தவிருக்கிறது ஒன்ப்ளஸ்.

அதிகாரபூர்வ தகவல்கள் வருவதற்கு முன்பே ஒன்ப்ளஸ் Z, ஒன்ப்ளஸ் 8 லைட் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது இந்தப் போன். இறுதியாக `ஒன்ப்ளஸ் நார்டு'தான் இதன் பெயர் என அதிகாரபூர்வமாக அறிவித்தது ஒன்ப்ளஸ். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போன்களில் ஒன்றாக இருக்கும் ஒன்ப்ளஸ் நார்டில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்.

ஒன்ப்ளஸ் நார்டு

இதுவரை இந்தப் போன் குறித்துப் பல தகவல்கள் கசிந்துள்ளன. அவற்றையெல்லாம் வைத்து இதன் ஸ்பெக்ஸ் எப்படி இருக்கும் என ஒவ்வொன்றாகப் பார்ப்போம். படங்களையும், புரொமோ வீடியோக்களையும் பார்க்கும்போது மற்ற ப்ரீமியம் ஒன்ப்ளஸ் போன்கள் போல இதுவும் கிளாஸ்/மெட்டல் ஃபினிஷ் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. நான்கு நிறங்களிலும் இது வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்ப்ளஸ் நார்டு

ஒன்ப்ளஸ் நார்டில் AMOLED டிஸ்ப்ளேதான் கொடுக்கப்படும் எனக் கிட்டத்தட்ட உறுதியாகவே சொல்லப்படுகிறது. ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார்கள் வைக்க தனியாக இடம் கொடுக்கப்படாததால் இதிலும் மற்ற ஒன்ப்ளஸ் போன்களைப் போல இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரிண்ட் சென்சார்தான் இருக்க வேண்டும். இதை வைத்தே நிச்சயம் AMOLED டிஸ்ப்ளேதான் கொடுக்கப்போகிறார்கள் என உறுதியாகச் சொல்லிவிடலாம். இந்த டிஸ்ப்ளே 6.55 இன்ச் அளவில் இருக்கும். ஹை-ரீஃப்ரெஷ் ரேட்டுக்கான சப்போர்ட் இருக்குமா என்பது சந்தேகம்தான். இருந்தாலும் 90Hz அளவிலேயே அது இருக்கும்.

கேமராவைப் பொறுத்தவரையில் பின்பக்கம் நான்கு கேமரா செட்-அப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (48 MP மெயின் கேமரா, 8 MP அல்ட்ராவைடு கேமரா, 5 MP டெப்த் சென்சார், 2 MP மேக்ரோ கேமரா). முன்பக்கம் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்படும் என ஒன்ப்ளஸ் வெளியிட்ட சமீபத்திய டீஸரில் தெரியவந்தது (32 MP + 8 MP அல்ட்ராவைடு). பிரீமியம் ஸ்மார்ட்போன் கேமரா ஏரியாவில் சாம்சங், ஆப்பிள், கூகுளிடம் போட்டிபோடுவதில் சற்றே திணறும் ஒன்ப்ளஸ். ஆனால், இந்த மிட்ரேஞ்ச் செக்மென்ட்டில் மிகச் சிறந்த கேமரா அனுபவத்தை ஒன்ப்ளஸ் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒன்ப்ளஸ் நார்டு

சமீபகாலமாகவே ஒன்ப்ளஸ் #Allin5G என்ற ஹேஷ்டேக்கை அதிகம் புரொமோட் செய்வதைப் பார்க்க முடிகிறது. அதன்படி இனிவரும் அனைத்து ஒன்ப்ளஸ் போன்களும் 5G சப்போர்ட்டுடன்தான் வரும். அப்படியென்றால் என்ன புராசஸர் கொடுக்கப்போகிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்..? இதுவரை பிரீமியம் 5G போன்களில் கொடுக்கப்பட்டுவரும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 புராசஸரை இந்த மிட்ரேஞ்ச் விலையில் தர முடியாது. முதல்முறையாக மீடியாடெக் புராசஸர்களுடன் ஒன்ப்ளஸ் களமிறங்கலாம் என்ற பேச்சு முதலில் அடிபட்டது. ஆனால், சமீபத்தில் 5G சப்போர்ட்டுடன் குவால்காம் அறிமுகப்படுத்திய மிட்ரேஞ்ச் ஸ்னாப்டிராகன் 765G புராசஸர்தான் ஒன்ப்ளஸ் நார்டில் கொடுக்கப்படும் எனத் தெரியவந்தது. இதை நேற்று ஒன்ப்ளஸ் உறுதிசெய்தது. ஆக்ஸிஜன் ஓஎஸ்தான் என்பதால் ஒன்ப்ளஸில் மெச்சப்படும் மென்பொருள் அனுபவம் நிச்சயம் இதிலும் இருக்கும். 4115 mAh பேட்டரியும் 30T ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கும்.

8GB/12 GB என இரண்டு RAM வேரியன்ட்களிலும், 128 GB/256 GB என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்களிலும் ஒன்ப்ளஸ் நார்டு வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

இந்தத் தகவல்கள் அனைத்தையும் உறுதிப்படுத்தும் விதமாக சில நாள்களுக்கு முன்பு ஒரு ஸ்பெக்ஸ் லீக்கும் வெளியில் வந்தது. அந்தப் புகைப்படத்தைக் கீழே காணலாம்.

ஒன்ப்ளஸ் நார்டு லீக்ஸ்

இப்படி அம்சங்கள் குறித்து ஓரளவுக்குத் தெரியவந்தாலும் விலை என்னவென்று இதுவரை தெளிவாக எந்தத் தகவலுமே வரவில்லை. சர்வதேச அளவில் விலை நிச்சயம் 500 டாலர்களுக்கும் குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை வைத்தும் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இந்தியாவில் 20,000 - 30,000 ரூபாய் இருக்கும் என்பது மட்டும் உறுதி. `சிலர் 21-ம் தேதி வெளியிடுவதே குறியீடுதான், 21,999 ரூபாய்தான் விலை' எனச் சொல்கிறார்கள். ஆனால் அவ்வளவு குறைவான விலையில் வெளிவருமா என்பது சந்தேகமே!

தொடக்க விலை சுமார் 25,000 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். இதுவரை கசிந்திருக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால் அம்சங்கள் அப்படியே ரியல்மீ X3-யை ஞாபகப்படுத்துகின்றன. அதனால் தனித்துவமான ஒரு போனாக ஒன்ப்ளஸ் நார்டு இருக்குமா என்பதும் தற்போதைக்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது. அடுத்த வாரம் அறிமுகமானதும் இதுபற்றிய தெளிவு கிடைக்கும். எப்படியும் ஒன்ப்ளஸின் ப்ரீமியம் பிராண்ட் அந்தஸ்து இந்த ஏரியாவில் பெரிதும் கைகொடுக்கும் என நம்பலாம்.

ஒன்ப்ளஸ் நார்டை ஒன்ப்ளஸ் பெரிதும் நம்பியிருக்கிறது என்பது அதன் ப்ரோமோஷன்களை பார்த்தால் புரியும். Give-away போட்டிகள், சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் என முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ஒன்ப்ளஸின் மார்க்கெட்டிங் டீம். இந்த முயற்சிகள் கைகொடுக்குமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்று தொடங்கும் ப்ரீ-புக்கிங்கிலேயே நிலவரம் ஓரளவு தெரிந்துவிடும்.

30 மணிநேரம் வரை பேட்டரி பேக்-அப் இருக்கும் என்றும் புரொமோ வீடியோக்களை வைத்து கணிக்க முடிகிறது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பலவும் இந்த TWS ஏரியாவில் கடுமையாகப் போட்டிப்போடத் தொடங்கியுள்ளனர். இந்தப் போட்டியில் ஒன்ப்ளஸும் களம் காண இருப்பதால் போட்டி இன்னும் சூடுபிடிக்கப்போகிறது. நல்ல போட்டி சிறந்த தயாரிப்புகளை எடுத்துவரும் என்பதால் TWS இயர்போன்களுக்கு இனி பொற்காலம் எனச் சொல்லலாம்.

இந்த TWS சந்தை எப்படி விரிவடைந்துவருகிறது என இந்த மாத மோட்டார் விகடனில் வெளிவந்த கட்டுரையைக் கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

Also Read: கேட்ஜெட்ஸ் : இனி TWS காலம்!

இப்படி 21-ம் தேதி நடக்கும் விழாவில் அறிமுகமாகும் கேட்ஜெட்கள் ஸ்பெஷல் என்றால், அந்த விழா இன்னும்கூட ஸ்பெஷல். COVID-19 காரணமாக டெக் விழாக்கள் அனைத்துமே ஆன்லைனில் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று AR (Augmented Reality) முறையில் இந்த விழாவை நடத்தப்போகிறது ஒன்ப்ளஸ். இந்த அனுபவம் எப்படியானதாக இருக்கும் என டெக் ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களோ அதே அளவு ஆர்வத்தில் நாங்களும் இருக்கிறோம். விழாவின் ஹைலைட்ஸுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம்!



source https://www.vikatan.com/technology/gadgets/oneplus-nord-price-and-features-what-to-expect

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக