'புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு, பஞ்சமி நிலங்களை மீட்டு, பட்டியலின மக்களுக்கு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. இதனை வலியுறுத்தி, கரூரில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
Also Read: கரூர்: சுடுகாட்டுப் பிரச்னை; விடிய விடிய போராட்டம்!- பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
கரூர் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பு, கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக சமநீதி கழகம் மற்றும் தலித் விடுதலை இயக்கம் இணைந்து, தமிழக முதலமைச்சருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் மூலம் பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தை தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் சா.கருப்பையா துவக்கிவைத்தபிறகு, போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் செலுத்தினர். அதைதொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைத் பொதுச் செயலாளரும், கரூர் மாவட்ட செயலாளருமான இரா.முல்லையரசு, சமநீதி கழகத்தின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியல் இன மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா, "தமிழகம் முழுவதுமுள்ள பஞ்சமி நிலங்களை தமிழக அரசு மீட்டெடுத்து, பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கரூரில் துவங்கப்பட்டுள்ள ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் தமிழக அரசுக்கு அனுப்பும் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் பஞ்சமர் என அழைக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் பஞ்சமி நிலம், ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்டது ஆனால், தற்போது தமிழகத்தில் அரசு பதிவேட்டில் ஒரு லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை, தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து போராட்டம் தீவிரப்படுத்தப்படும்" என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/karur-parties-protest-to-give-back-the-land-given-to-scst-peoples
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக