Ad

சனி, 3 ஜூலை, 2021

Covid Questions: கொரோனா தொற்று குறைகிறது; இன்னும் நான் மாஸ்க் அணியத்தான் வேண்டுமா?

கொரோனா தொற்றின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துவருகிறது. இந்நிலையில் இனியும் மாஸ்க் அணிய வேண்டுமா? இந்த நிலையிலும் டபுள் மாஸ்க் அணிகிறவர்களைப் பார்க்கிறேன். அது அவசியமா? சில நாடுகளில் மாஸ்க் தேவையில்லை என அறிவித்திருக்கிறார்களே...

- சவிதா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

கொரோனாவோடு வாழப் பழகிக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நாம், இனிமேல் COVID appropriate behaviour என்ற விஷயத்தையும் எப்போதும் பின்பற்றியே ஆக வேண்டும். அதாவது கைகழுவுதல், மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளி போன்ற அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் சில வருடங்களுக்குப் பின்பற்றியே ஆக வேண்டும். எனவே, `மாஸ்க் அவசியமா ?' என்ற கேள்வியே அர்த்தமற்றதாகிறது.

முறையாக ஒரு மாஸ்க் அணிய வேண்டியது மிக மிக முக்கியம். முடிந்தவர்கள் இரண்டு மாஸ்க் அணியலாம். N 95 மாஸ்க் அவசியமில்லை. இரண்டு அல்லது மூன்றடுக்கு துணி மாஸ்க்கே போதுமானது.

அமெரிக்காவில் அதிகபட்சமாகத் தடுப்பூசி போடப்பட்ட பகுதிகளில், வெளியிடங்களில் மட்டும் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மூடப்பட்ட இடங்களைவிட, திறந்தவெளிகளில் தொற்றுப்பரவல் குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதனால் அவர்களும் திறந்தவெளிகளில் மாஸ்க் அவசியம் என்று வற்புறுத்துவதில்லை. அந்த நிலையிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றச் சொல்கிறார்கள். அங்கேயும் வீட்டுக்குள் இருக்கும்போதும், மூடிய இடங்களுக்குள் இருக்கும்போதும், பணியிடங்களிலும், கடைகளிலும் மாஸ்க் அணிய வேண்டும் என்றே சொல்கிறார்கள். இது எதுவும் நமக்குப் பொருந்தாது. நாம் இன்னும் சில வருடங்களுக்கு எல்லா இடங்களிலும் மாஸ்க் அணிந்தே ஆக வேண்டும்.

Mask

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?

இரு நபர்களுக்கு இடையில் இடைவெளி குறைவாக இருக்கும் இடங்களில் காற்று மூலம் இந்தத் தொற்று பரவுவது உறுதியாகியிருக்கிறது. அதனால்தான் மாஸ்க் அணிவதையும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதையும் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறோம். இந்த வைரஸ் போய், இன்னொன்று வந்தாலும் இதுதான் விதி."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/can-we-stop-wearing-masks-as-the-covid-infection-has-dropped-considerably

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக