என் நண்பர் லுகேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான மருந்துகளை எடுத்துவருகிறார். இந்நிலையில் அவர் கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
- பழனி சித்ரா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
``எந்தவகையான புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களும் அதற்கான சிகிச்சை மேற்கொண்டவர்களும் கண்டிப்பாக கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். சிலவகை புற்றுநோய்களுக்கு முதலில் கீமோதெரபி போன்ற தீவிர சிகிச்சை கொடுத்துவிட்டு, பிறகு வாழ்நாள் முழுவதும் சாப்பிடும்படியான மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.
Also Read: Covid Questions: சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் ஆன பின்னும் தொடரும் இருமல்; விடுபட என்ன வழி?
உங்களுடைய நண்பர் இதில் எந்தக் கட்ட சிகிச்சையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் `ஆக்டிவ் கீமோதெரபி' சிகிச்சையில் இருக்கிறார் என்றால், இரண்டு கீமோதெரபிக்களுக்கு இடையே, அதாவது ஒரு கீமோதெரபி எடுத்து ஒரு வாரம் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கீமோதெரபியெல்லாம் முடிந்துவிட்டது, ஃபாலோஅப் சிகிச்சையில் இருக்கிறார் என்றால் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
ஏற்கெனவே பலமுறை சொன்னதுபோல புற்றுநோய் என்பது கோவிட் தொற்றைப் பொறுத்தவரை மிக முக்கியமான இணைநோய். அதனால் புற்றுநோய் பாதித்தவர்கள், சிகிச்சையில் இருப்போர், சிகிச்சை முடிந்தவர்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
Also Read: Covid Questions: மஞ்சள் காமாலை இருப்பவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
புற்றுநோயாளிகள் மட்டுமல்ல, அவர்களுடன் தொடர்பிலிருப்போர், வீட்டு நபர்கள், பராமரிப்பாளர்கள் போன்றோரும் முடிந்தவரை சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது. அதன் மூலம் அவர்கள் கோவிட் தொற்றிலிருந்து தப்பிக்கிறார்கள். தவிர அவர்களிடமிருந்து சம்பந்தப்பட்ட அந்தப் புற்றுநோயாளிக்கும் தொற்று பரவுவதைத் தடுக்கிறார்கள்.
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-blood-cancer-patients-take-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக