நாய்க்கடி ஊசி (4 டோஸ்) போட்டுகொண்டவர்கள் எத்தனை நாளைக்குப் பிறகு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?
- மோகன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.
``இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் அப்படி எந்தத் தொடர்புமில்லை. இரண்டையும் ஒரே நாளில்கூட போட்டுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒருவர் அன்றுதான் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம்.
Also Read: Covid Questions: கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எத்தனை நாள்கள் கழித்து ரத்ததானம் செய்யலாம்?
அதே தினம் அவர் நாய்க்கடிக்கு ஆளாகிறார் என்றால் அன்றே அவர் ஆன்டி ரேபிஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளலாம் என்று தனது சமீபத்திய அறிக்கையில் சொல்லியிருக்கிறது 'அசோசியேஷன் ஃபார் ப்ரிவென்ஷன் அண்டு கன்ட்ரோல் ஆஃப் ரேபிஸ் இன் இந்தியா' (APCRI).
இரண்டு தடுப்பூசிகளும் ஒன்றுக்கொன்று எதிர்வினை ஆற்றக்கூடியவை அல்ல என்பதால் பயம் வேண்டாம். கோவிட் காலத்தில் இது போன்ற வெறிநாய்க்கடி தொடர்பாகவும் அதற்கான தடுப்பூசி குறித்தும் மக்களுக்கு சந்தேகங்கள் அதிகரித்திருக்கின்றன. இரண்டு டோஸ்களுக்கு நடுவில் நாய் கடித்தவர்கள் என்ன செய்வது, ஆன்டி ரேபிஸ் மற்றும் கோவிட் தடுப்பூசிகளுக்கான இடைவெளி எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நிறைய பேர் கேட்கிறார்கள். வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசியை தாமதிக்காமல் உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
Also Read: Covid Questions: வண்டலூர் சிங்கங்களுக்கு கொரோனா; என் வீட்டு நாய், பூனைகளையும் தாக்குமா?
நாய்க்கடிக்கான தடுப்பூசிக்கும் கோவிட் தடுப்பூசிக்குமான இடைவெளி என இதுவரை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் அது குறித்த கவலை தேவையற்றது."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/how-long-one-should-wait-for-covid-vaccines-after-taking-rabies-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக