Ad

திங்கள், 7 ஜூன், 2021

கோவை: அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு! -கொரோனா வார்டு அருகே சேர் போட்டு அமர்ந்த ஆட்சியர்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு 2,000-க்கு கீழ் செல்ல கோவை மாவட்டத்தில் மட்டும் பாதிப்பு 2,000-க்கு மேல் உள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சித்திக், வீரராகவராவ் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை

Also Read: கோவை:`நாங்கதான் தடுப்பூசிக்கு டோக்கன் கொடுப்போம்' - திமுக-வினர் அட்ராசிட்டி; மக்கள் அவதி

அதேபோல கோவை மாவட்ட நிர்வாகமும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் உயர் மருத்துவ அதிகாரிகள் பலர் இல்லை. அப்போது சென்றால் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும் என்று அவர் திடீர் ஆய்வு செய்தார்.

ஆட்சியர் நாகராஜன்

நோயாளிகளுடன் இருந்த அட்டென்டர்கள், மருத்துவப் பணியாளர்களிடம் குறை மற்றும் தேவைகளை கேட்டறிந்த ஆட்சியர், பிறகு கொரோனா வார்டு அருகே சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

மாலை 4.40 மணியளவில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த நாகராஜன், இரவு 8 மணிவரை இருந்து ஆய்வு செய்துள்ளார். கோவையில் தொற்று பெரிய அளவுக்கு குறையாத நிலையில் மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் வசதிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்துள்ளார். ஆட்சியரின் திடீர் ஆய்வு, அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தினாலும், மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆட்சியர் நாகராஜன்

“இதேபோல அனைத்து அதிகாரிகளும் எங்களின் குறைகளை கேட்டு தீர்வு கொடுக்க வேண்டும்” என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-district-collector-inspects-in-government-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக