Ad

திங்கள், 12 ஜூலை, 2021

`நள்ளிரவிலும் தொடரும் காத்திருப்பு; தடுப்பூசிக்காக அல்லாடும் கோவை மக்கள்' #SpotVisit

நள்ளிரவு 2 மணி... கோவை வடவள்ளி மருதமலை சாலையில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அவ்வபோது வாகனங்கள் நகர்வதைத் தவிர பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை. சிறிது தூரத்தில் பேச்சுக் குரல் கேட்டது. சற்றே வயதான மூன்று பெண்கள், " எந்த இடத்துல ? டோக்கன் கொடுத்துட்டாங்களா ?" என செல்போனில் விசாரித்துவிட்டு வேகமாக நடந்தனர்.

தடுப்பூசிக்குக் காத்திருக்கும் கோவை பெண்கள்

Also Read: கோவை: `ஓடி ஓளிவது யார்?' - பழங்குடி மக்கள் தடுப்பூசி விவகாரமும், ஒரு செயற்பாட்டாளரின் பார்வையும்!

கொரோனா தடுப்பூசி முகாமுக்கு செல்லதான் இந்த வேகம். கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் பிடித்து 50 நாள்களை நெருங்கிவிட்டன. ஆனால், இப்போதுவரை தடுப்பூசி பிரச்னை ஓய்ந்தபாடில்லை.

தடுப்பூசி விவகாரத்தில் கோவை புறக்கணிப்படுவதாகப் பரவலாகக் கருத்து நிலவி வருகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன. தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் நிற்க தொடங்கிய மக்கள், தட்டுப்பாடு அதிகமாக, அதிகமாக முந்தைய நாள் இரவில் இருந்து சாலையில் காத்திருக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.

கொரோனா தடுப்பூசி

இதனிடையே 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கோவையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை. கிட்டத்தட்ட 10 நாள்கள் கழித்து 12-ம் தேதி நேற்றுதான் முகாம் நடத்தப்பட்டது. மக்களின் வேதனைகளைப் பதிவு செய்ய களத்தில் இறங்கினோம்.

நள்ளிரவு 1 மணி...

நள்ளிரவு 12 முதலே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அரசு அறிவித்த முகாம் மையங்களை மேப் போட்டு, ஒவ்வொரு இடத்துக்காக சென்றோம். சில இடங்களில் மக்கள் இல்லை. "நிலைமை மாறிவிட்டதா..? மழை, குளிர் காரணமாக மக்கள் வரவில்லையா..?" என யோசித்துவிட்டே வேலாண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி முகாமுக்கு சென்றோம்.

கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி

வழியில் இருந்த போலீஸ் ஒருவர், "சார்... இப்பதான் பார்த்துட்டு வரேன். அங்க யாரும் இல்ல..." என்று கூறினார். எதற்கும் பார்த்துவிடுவோம் என்று சென்றோம். பள்ளிக்கு சற்று முன்பு ஒரு நடுத்தர வயது பெண் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அருகில் சென்று பார்த்தபோது, 2 முதியவர்கள், 1 கணவன்- மனைவி, 2 இளைஞர்கள் தடுப்பூசிக்காகக் காத்திருந்தது தெரியவந்தது. சிறிது நேரத்திலேயே மேலும் பலர் கூடிவிட்டனர். " என் பொண்ணு ஒரு தனியார் பள்ளில டீச்சரா இருக்காங்க. அங்க சீக்கிரமா தடுப்பூசி போட சொல்லிருக்காங்க. போனமுறை 5.30 மணிக்கே டோக்கன் கொடுத்துட்டாங்க.

கோவை தடுப்பூசி

அவங்களை காத்திருக்க வைக்க முடியாதுல. அதான் நான் நிக்கறேன் தம்பி" என்று குளிரில் சற்று நடுக்கத்துடன் கூறினார் 71 வயது முதியவர் துரைசாமி. அங்கு கூடிய பலரும் சமூக வலைத்தளங்களில் வந்த மாநகராட்சி அறிவிப்பை பார்த்து வந்துள்ளோம்" என்று கூறினர்.

நள்ளிரவு 2 மணி..

தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு சென்றோம். பள்ளியை நெருங்கும் முன்பே மக்கள் நீண்ட வரிசையில் நின்றது தெரிந்தது. வேலாண்டிபாளையம் பள்ளி முன்பு அமருவதற்கு சற்று இடம் இருந்தது. ஆனால், இடையர்பாளையம் பகுதியில் மக்கள் அமர்வதற்குக் கூட இடமில்லை. மழை பெய்து சுற்றி சகதிகளாக இருந்தது. காலைவரை, கால் கடுக்க காத்திருப்பதைத் தவிர அந்த மக்களுக்கு வேறு வழியில்லை.

இடையர்பாளையம் நடுநிலைப்பள்ளி

"யார்.. யார் தடுப்பூசி போட்டுள்ளனர்? என மாநகராட்சி வீடு வீடாக சென்று கேட்கின்றனர். ஆனால் ஊசி போடுவதற்குத்தான் வழியில்லை. ஒரு நாள் போட்டால்.. 10 நாள் போடுவதில்லை. டோக்கன் சரியாகக் கிடைப்பதில்லை. அதனால்தான் நாங்கள் இரவு முதல் காத்திருக்க வேண்டியுள்ளது" என்றார் மகாலட்சுமி என்ற பெண்.

நள்ளிரவு 3 மணி..

வடவள்ளி பகுதியில் நாம் நின்று கொண்டிருந்தபோது, 3 பெண்கள் தடுப்பூசி குறித்து விசாரித்துவிட்டு அவசர அவசரமாக சென்று கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குறுகிய சந்துக்குள் சென்றனர். அங்கு தெருவிளக்குகூட இல்லை. எதிர் எதிரே இரண்டு வாகனங்கள் வர முடியாதளவுக்கு நெருக்கடியான பகுதி.

கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி

ஆனால், நாம் அங்கு சென்றபோது 100-க்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசிக்காகக் காத்திருந்தனர். அருகில் புதர்கள் அதிகம் இருந்ததால், சில நிமிடங்களிலேயே கொசுக்கள் கும்பல், கும்பலாக நம்மை தாக்க தொடங்கின.

அந்த முகாம் பெயர் வடவள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. அங்கு முதல் ஆளாக காத்திருக்கும் வசந்தா என்ற மூதாட்டி, "நான் முதல் தடுப்பூசி போட்டு 90 நாளுக்கு மேல ஆச்சு. 10 நாளுக்கு முன்னாடி இரண்டாவது தடுப்பூசிக்காக இதே மாதிரி காத்திருந்தேன். ஆனா, இன்னும் ஒருநாள் டைம் இருக்குனு அனுப்பி விட்டாங்க. அப்ப இருந்து தினமும் தடுப்பூசி முகாம் போடறாங்களானு வந்து பார்ப்பேன்.

கோவை தடுப்பூசி

நைட் 9 மணிக்கு மழைல குடைய பிடிச்சுட்டு வந்து கேட்டப்ப, ஊசி போடறதா சொன்னாங்க. அப்படியே உக்காந்துட்டேன் சாமி.. என்ன சொல்றது. ஏழை மக்களை கஷ்டப்படுத்தாம தடுப்பூசி போட்டா சரிதான்" என்றார்.

தடுப்பூசிக்காக இரவு சாப்பிடாத வசந்தா பாட்டி, பள்ளி கேட்டின் அருகே சுருண்டு படுத்துக் கொண்டார். "கொரோனா பரிசோதனை வீதி வீதியா எடுக்கறாங்க.. அந்த மாதிரி இல்லாவிடினும் வார்டு வாரியாக தடுப்பூசி முகாம் நடத்தினாகூட பரவாயில்லை. இந்த மாதிரி நடத்தி ஜனங்களை சிரமப்படுத்தக்கூடாது.

கோவை தடுப்பூசி

"கொரோனா காலத்துல ஜனங்க கிட்ட பணம் காசு இல்ல. சோத்துக்கே படாத பாடு படறாங்க. இந்த நிலைல நைட் முழுசும்.. கொசுக்கடி, மழை, குளிர்னு வேற நோய் வந்துடுமோனு பயமா இருக்கு" என்கிறார் பாலசுப்பிரமணியம்.

அதிகாலை 4 மணி..

கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஆரம்பித்த வரிசை, மருதமலை சாலையை தாண்டி சென்று கொண்டிருந்தது. மக்கள் சேர், போர்வைகளுடன் வந்து தங்கியிருந்தனர். டீ விற்பனை சூடுபிடித்திருந்தது. வயதானவர்களும், பெண்களும் மழை குளிரை பொருட்படுத்தாமல் தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி

சற்று தூரம் பயணித்து சீரநாயக்கன்பாளையம் அரசு பள்ளிக்கு சென்றோம். 12 முதலே மக்கள் காத்திருக்க தொடங்கியதால் கிட்டத்தட்ட அரை கி.மீ தொலைவுக்கு மக்கள் கூடிவிட்டனர். ஓரமாக இருந்த ஒரு போலீஸ் நாம் சென்றதும் வரிசையை ஒழுங்குப்படுத்தத் தொடங்கினார்.

அதிகாலை 5 மணி..

ஆர்.எஸ்.புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றோம். கிட்டத்தட்ட 1 கி.மீ தொலைவுக்கு மக்கள் வரிசை நீண்டிருந்தது. தொடர்ந்து மக்கள் ஆட்டோ வைத்தும் தங்களது வாகனங்களிலும் கூடிக் கொண்டிருந்தனர். சிலர் சாலையிலேயே போர்வை போர்த்தி தூங்கியிருந்தனர். நீண்ட வரிசைக்கு நடுவே ஒரு பெண் திடீரென்று நுழைய, மற்ற மக்கள் ஆத்திரமடைந்து சண்டை போடத் தொடங்கினர்.

கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி

5.30 மணிக்கு மேல் மாநகராட்சி அதிகாரிகள் வரதொடங்கினர். 300 நபர்களை வரிசைப்படி எண்ணி சற்று நேரத்திலேயே டோக்கன் கொடுத்தனர். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் சிலருக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை.

குளறுபடி..

தடுப்பூசி முகாம் குறித்த தகவல்களை கோவை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மிக தாமதமாக வழங்குகின்றன. அதிலும் முழுமையான தகவல்கள் இல்லை. உதாரணத்துக்கு ஆர்.எஸ்.புரம் சமுதாயக் கூடத்தில் தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளனர். ஆனால், அதன் சரியான முகவரியை கூறாததால் பலருக்கும் அது எங்குள்ளது என்றே தெரியவில்லை.

கோவை தடுப்பூசி

ஒருவழியாக அதை கண்டுபிடித்து சென்றால், ‘முகாம் இங்க இல்ல மாற்றிவிட்டோம்’ என அருகில் உள்ள கிக்கானி பள்ளியைக் காட்டினர். இப்படி பல இடங்களில் முகாம் நடக்கும் இடம் குறித்த தெளிவான அறிவிப்பு இல்லததால், மக்கள் இரவு முதல் பல இடங்களில் அலைந்து திரிந்து முகாமை கண்டுபிடிக்கின்றனர்.

காலை 6 மணி..

குறுகிய சாலையில் ஏராளமான மக்கள் நின்றிருந்த வடவள்ளி தொடக்கப்பள்ளிக்கு மீண்டும் சென்றோம். ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்கப்படும் என்றும், சில இடங்களில் நேரடியாக தடுப்பூசி போட்டுவிடுவோம் என்று கூறினர். "டோக்கன் இல்லாம எந்த அடிப்படைல ஊசி போடுவீங்க?" என்று அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "இப்பவே ஊசி போட்ருவோம்.. அதான் டோக்கன் இல்ல.." என மாநகராட்சி ஊழியர் கூறினர்.

கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி

"நைட்ல இருந்து இருக்கோம். சாப்பிடாம எப்படிங்க ஊசி போட முடியும்?" என்று ஆதங்கப்பட்டனர். "எங்களுக்கு இதான் சொல்லிருக்காங்க. முடியும்னு நினைக்கறவங்க மட்டும் இருங்க" என்று அவர் அலட்சியமாக கூறி சென்றார்.

இதற்கு நடுவே ஒரு வயதான பெண் மயக்கம் போட்டுவிட்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் தெளித்து, அவருக்கு பிஸ்கெட், சாக்லெட் ஆகியவற்றை கொடுத்தனர். அலட்சியமாக பேசிய அந்த மாநகராட்சி ஊழியரிடம், "பலர் இரவு நேர உணவையே எடுக்கவில்லை. காலையிலும் சாப்பிடாமல் இருந்தால் எப்படி.?

கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி

ஏன் அலட்சியமாக பதில் சொல்கிறீர்கள்?" எனக் கேட்டோம். "சார்.. நான் அப்படி எல்லாம் சொல்லலை.. என்னை பேட்டிலா கேட்காதீங்க. எனக்கு சொன்ன விஷயங்களைதான் சொன்னேன். உங்க சந்தேகங்களை எங்க எஸ்.ஐ சார் கிட்ட கேட்டுக்கோங்க. அவர் இப்ப வந்துடுவார்" என நகர்ந்தார்.

மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் வந்ததும், கூட்டத்தை பார்த்து மக்களுக்கு டோக்கன் வழங்குவது என்று முடிவு செய்தார். ஆதார் நகல் வேணும்.. செல்போன் வேணும் என கூட்டத்தில் பல தகவல்கள் காட்டுத்தீயாக பரவ, சிலர் அவசரமாக ஆதார் நகல் எடுக்கச் சென்றனர். அதில் சிலர் வருவதற்குள் டோக்கன் முழுமையாக கொடுக்கப்பட்டுவிட்டது.

கோவை தடுப்பூசி

Also Read: கோவை: முந்தைய நாள் இரவிலிருந்து காத்திருக்கும் மக்கள்! - தொடரும் தடுப்பூசி அவலம்

கடைசி நேர பதற்றத்தால், பல மணி நேரம் காத்திருந்தும் சிலருக்கு டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். முதல் 50 பேருக்கு உடனடியாகத் தடுப்பூசி போடப்படும் என்று அதிகாரி கூறினார்.

"பலரும் சாப்பிடாமல் இருக்கின்றனர். எப்படி சார்..?" என அவரிடம் கேட்டோம் அதற்கு அவர், "சார் மருத்துவர் செக் பண்ணிவிட்டுதான் ஊசி போடுவார்" என்று கூறினார். சற்று நேரத்தில் தடுப்பூசி போட மருத்துவக்குழு வந்தனர். அவர்களிடமும் அதே கேள்வியை முன்வைத்தோம். "எல்லாம் அவங்க விருப்பம்" என்று சொல்லி நகந்துவிட்டனர்.

கோவை தடுப்பூசி

சிறிது நேரத்தில் அந்த சுகாதார ஆய்வாளர் வந்து, "சார் மாநகராட்சி சுகாதார அலுவலர் லைன்ல இருக்கார் பேசுங்க" என்று நம்மிடம் அவர் செல்போனை நீட்டினார்.

"சார் நாங்க யாரையும் கட்டாயப்படுத்தல. சாப்பிடணும்னு நினைக்கறவங்க சாப்பிடட்டும். சேலத்துல இப்படிதான் சீக்கிரமாக தடுப்பூசி முகாம் தொடங்கறாங்க. அது எங்க பணியை எளிதாக்குது. இதுக்கு என்ன தீர்வுனு நினைக்கறீங்க. டோக்கன் விஷயத்துல ஏற்கெனவே பிரச்னை வந்துருக்கு.

கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி

அதனால சூழ்நிலையை பொறுத்துதான் டோக்கன் கொடுக்கலாமா..? வேண்டாமா?"னு..முடிவு செய்வோம். என்ன பண்ணாலும்.. மக்கள் காத்திருக்கதான் செய்வாங்க சார். இந்தப் பிரச்னைக்கு தீர்வு கொடுக்க ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை அணுகியுள்ளோம்" என்றார்.

கடைசிவரை அவர் சாப்பிடாமல் ஊசி போடுவதால் பிரச்னை வராது என்று உறுதியளிக்கவில்லை. மக்களின் ரத்த அழுத்தம், நாடி உள்ளிட்ட எந்த சோதனையும் செய்யாமல் தடுப்பூசி செலுத்தினர். இரவு 9 மணி முதல் காத்திருந்த வசந்தா பாட்டிக்கு காலை 7.30 மணியளவில் ஊசி போட்டனர்.

கோவை தடுப்பூசி
கோவை தடுப்பூசி

தடுப்பூசி டோஸ் வழங்குவதில் மத்திய அரசு இன்னும் சரியான திட்டமிடலைக் கையாளவில்லை. மற்றொருபுறம், டாஸ்மாக் திறப்பு தொடர்பாக, 3 நாள்களுக்கு முன்பே கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம். களத்தில் தனி மனித இடைவெளிக்கான வளையங்கள் என முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமடைந்தன.

ஆனால், தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்களுக்கு தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. தனிமனித இடைவெளியும் இல்லை. அதிகாரிகள் அதிகாலை வந்து அவசர அவசரமாக தங்கள் பணியை முடித்து செல்கின்றனர் அவ்வளவுதான். அதிகாரிகள் இப்படியென்றால் அரசியல் கட்சிகள், ஒன்றிய அரசா..? மத்திய அரசா..? கொங்குநாடா..? தமிழ்நாடா.? என்று விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர்.

கோவை தடுப்பூசி

இரவு முழுவதும் சாலையில் காத்திருக்கும் மக்கள் குறித்து யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. கோவை மக்களின் பிரச்னைகளை கவனிக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும், "வலிமை அப்டேட் வாங்கிக் கொடுத்துட்டேன்" என சிலாகித்து வருகின்றனர்.

தடுப்பூசி மக்களின் அடிப்படை உரிமை. அரசு நிர்வாகம் இனியும் அலட்சியம் காட்டாமல்,

கோவை தடுப்பூசி

மக்களுக்கு தடுப்பூசி எளிதாக கிடைக்க வழி செய்ய வேண்டும்.



source https://www.vikatan.com/news/tamilnadu/ground-report-on-vaccine-distribution-at-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக