கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையிலிந்து திரும்பியதும், எத்தனை நாள்கள் கழித்து மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யலாம்?
- ஷியாம் சுந்தர் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் ஸ்வாமிநாதன்.
``கொரோனா தொற்றுக்குள்ளாகி ஏராளமான நபர்கள் மீண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு நீண்டகால பிரச்னைகள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறோம். கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் ஓரளவுக்கு ஃபாலோ அப் சிகிச்சைகளை, பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். எல்லோருமே வருடம் ஒருமுறை பொதுவான ஹெல்த் செக்கப் மேற்கொள்வது நல்லது. அதிலும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு அது இன்னும் அவசியமாகிறது.
Also Read: Covid Questions: தொற்றிலிருந்து மீண்டவர்கள் எத்தனை நாள்கள் கழித்து உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்?
கொரோனாவுக்குப் பிறகு அவர்களுக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா, அவற்றுக்கு சிகிச்சைகள் தேவையா என்பதை அதில் தெரிந்துகொள்ளலாம்.
உடல்நலம் சரியில்லாதவர்கள் அந்த நேரத்தில் ஹெல்த் செக்கப் செய்ய வேண்டாம் என்றே அறிவுறுத்தப்படுவார்கள். ஏனெனில் அந்த நேரத்தில் அவர்களுக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்தால் அவற்றின் முடிவுகள் சரியாக இருக்காது. அதனால்தான் நோயிலிருந்து மீண்டு வந்த பிறகே ஹெல்த் செக்கப் செய்ய அறிவுறுத்துவோம்.
Also Read: Covid Questions: 20 வருடங்களாக Inderal 40 மாத்திரை எடுத்து வருகிறேன்; தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், 2 முதல் 4 வாரங்களில் மருத்துவரை சந்தித்து மெடிக்கல் செக்கப் செய்துகொள்வது நல்லது. நீண்டகால பிரச்னைகள் இருந்தால் அதற்கேற்ற சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். மற்றபடி வழக்கமாக ஒருவர் மேற்கொள்ளும் ரத்தச் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு போன்றவற்றை சரிபார்க்கும் பரிசோதனைகளை கொரோனாவிலிருந்து மீண்டு வந்து 6 வாரங்கள் கழித்துச் செய்து பார்க்கலாம்.
அப்போது தொற்றின் பாதிப்புகள் ஓரளவுக்கு குறைந்திருக்கும். தொற்றுக்குள்ளாகி மீண்ட நபரின் உடல்நலம் எப்படியிருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரியும். எனவே நீங்கள் கேட்டிருக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பையும் 6 வாரங்கள் கழித்தே செய்து கொள்ளலாம்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/after-how-many-days-can-a-covid-recovered-person-undergo-master-health-check-up
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக