சென்னை ராயபுரம், அர்த்தோன் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஜீனத்மரியம் (43). இவர் துணிக்கடை நடத்திவருகிறார். இவருடைய வீட்டில் கடந்த 1.12.2019-ம் தேதி பீரோவில் இருந்த 56 சவரன் தங்க நகைகள் மாயமானது. இதுகுறித்து ஜீனத்மரியம், ராயபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீனத்மரியம் வீட்டில் திருடியது அவரின் உறவினர் சிராஜிதீன் (45) எனத் தெரியவந்தது.
Also Read: `8 வருட தொடர் திருட்டு; பூட்டியிருக்கும் கிராமத்து வீடுதான் டார்கெட்’ -பலே திருடன் சிக்கியது எப்படி?
இதுகுறித்து ராயபுரம் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட சிராஜிதீன், திண்டுக்கல்லில் சொந்த வீடு கட்டியிருக்கிறார். அதற்கு பணம் தேவைப்பட்டதால் உறவினரான ஜீனத்மரியத்திடம் கேட்டிருக்கிறார். ஆனால் பணத்தை அவர் கொடுக்கவில்லை. உறவினர் என்பதால் ஜீனத்மரியம் வீட்டுக்கு சிராஜிதீன் வந்தபோது வீட்டில் தங்க நகைகள் இருப்பதை தெரிந்துக் கொண்டிருக்கிறார். அதனால் நகைகளைத் திருட சிராஜிதீன் திட்டமிட்டிருக்கிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று சிராஜிதீன் வீட்டுக்கு வந்தபோது அங்கு யாருமில்லை. அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிராஜிதீன், நகைகளை திருடியிருக்கிறார். இதையடுத்து அவரை கைது செய்து 44 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-man-who-theft-in-his-relative-house-itself
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக