அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்துப் பல்வேறு செய்திகள் பரவின. இந்தநிலையில் அதிமுக-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``கழக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுசூதனின் உடல்நிலை குறித்து விசாரிக்க சசிகலா மருத்துவமனைக்கு வந்தார். அவர் வந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. அதேநேரம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனையில் மதுசூதனின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்திருந்தார். சசிகலா வந்தபோது எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்தார். இதனால் அப்போலோவில் மீண்டும் ஒருமுறை பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
Also Read: Tamil News Today: `அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்!’ - அ.தி.மு.க
source https://www.vikatan.com/government-and-politics/politics/sasikala-edappaadi-palanisamy-came-to-apollo-hospital-at-same-time-to-enquire-mathusuthanans-health
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக