புதிதாகத் திருமணம் ஆனவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? குழந்தைப் பிறப்பில் ஏதாவது பிரச்னை வருமா?
- அருள்குமார் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
``புதிதாகத் திருமணமானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் எந்தப் பிரச்னையும் இதுவரை சொல்லப்படவில்லை. கர்ப்பம் தரிப்பதிலும் தடுப்பூசி எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
ஆனாலும், புதிதாகத் திருமணமான தம்பதியர் உடனே குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருந்தால், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டு, அதன் பிறகு ஒரு மாதம் கழித்து கர்ப்பத்துக்குத் திட்டமிடலாம் என்பது என் அட்வைஸ்.
Also Read: Covid Questions: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் இருக்குமா?
இப்படிச் சொல்வதற்கு முக்கியமான காரணம் உண்டு. நம்மூரில் கர்ப்ப காலத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதில்லை. எனவே தடுப்பூசி போட்டுக் கொண்டு, குழந்தைப் பேற்றுக்கு பிளான் செய்யலாம். கர்ப்பகாலத்தில் கொரோனா தாக்கினால் உருவாகும் ரிஸ்க்கையும் இதன் மூலம் தவிர்க்கலாம்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-a-couple-planning-for-child-take-vaccines-for-covid-19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக